உலகம் இறுதியஞ்சலி: போப்பாண்டவர் உடல் நல்லடக்கம்
வாட்டிகன்:
![]() |
மறைந்த போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பாலின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
வாடிகனின் செயிண்ட் பீட்டர் தேவாலயத்தின் எதிரே லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் அதற்கான நிகழ்ச்சி நடந்தது.
ஆலய மணிகள் ஒலிக்க, அவரது உடல் அடங்கிய பெட்டி 12 பேரால் பீட்டர் ஆலயத்தில் இருந்து வெளியே எடுத்து வரப்பட்டது.அப்போது இறுதியஞ்சலி செலுத்தும் வகையில் வாத்தியங்கள் முழங்கப்பட்டன. கிருஸ்துவ பாடல்களுடன், நல்லடக்கத்துக்கானபிரார்த்தனை நடந்தது.
இந் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இந்திய துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத் உள்ளிட்ட 200க்கும்மேற்பட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதனால் அந் நாட்டில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுமார் 3 மணி நேரம் நடந்த இந்தப் பிரார்த்தனைகள் முடிந்த பின் போப்பாண்டவரின் உடல் மீண்டும் தேவாலயத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டது. புனித பீட்டர் பேராலயத்தில் உள்ள பாதாள அறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இது புனிதபீட்டரின் கல்லறைக்கு அடுத்துள்ளது.
இந் நிலையில் போப் ஜான் பால் தனது உடல் நிலையையும் வயதையும் காரணம் காட்டி 2000மாவது ஆண்டிலேயே பதவி விலகமுன் வந்த விவரத்தை வாடிகன் இப்போது வெளியிட்டுள்ளது. ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
அவரே போப்பாக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதை அவர் ஏற்றுக் கொண்டார். மேலும் பதவி விலகி தனதுசொந்த ஊரான போலந்துக்கே செல்லவும், தனது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் போப்விரும்பியுள்ளார்.
ஆனால், பின்னர் தனது கருத்தை மாற்றிக் கொண்ட போப் தனது உடல் அடக்கத்தை எங்கே செய்வது என்பதை கார்டினல்கள்முடிவு செய்யலாம் என தனது உயிலில் எழுதியுள்ளார்.
தனக்கென்று சொத்து எதையும் சேர்க்காத அந்த மகான் தனது உடலுடன் தான் பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி உள்ளிட்டபொருட்களை மட்டும் புதைக்குமாறு கோரியுள்ளார்.
அவரது உடல் அடக்கத்தில் பங்கேற்க சுமார் 40 லட்சம் பேர் வாடிகனில் குவிந்தனர்.
அடுத்த போப்பாண்டவரைத் தேர்வு செய்ய வரும் 18ம் தேதி 117 கர்னல்களும் வாடிகனில் கூடி முடிவு செய்யவுள்ளனர்.
இதற்கிடையே போப்பாண்டவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியிலும் தனது அரசியல் புத்தியைக் காட்டியுள்ளது சீனா. இந்தநிகழ்ச்சியில் பங்கேற்க தைவான் அதிபருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து இந் நிகழ்ச்சியில் பங்கேற்க அரசின் சார்பில் யாரையும் அனுப்பப் போவதில்லை என சீனா அறிவித்துள்ளது.தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதை சீனா எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
![]() |
இந்தியாவிலும் சிறப்பு பிரார்த்தனை:
இதற்கிடையே மறைந்த போப்பாண்டவரின் உடல் நல்லடக்கத்தையொட்டி உலகம் முழுவதும் தேவாலயங்களில்சிறப்புபிரார்த்தனைகள் நடந்தன.
தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்றன.
இதற்கிடையே போப் ஆண்டவர் மறைவையொட்டிமுதல்வர் ஜெயலலிதா விடுத்த இரங்கல் செய்தி வாடிகன் ரேடியோவில்இன்றும் நாளையும் ஒலிபரப்பாகிறது.
இந்திய நேரப்படி இன்று காலை 6.15, 8.00 மணிக்கும் மற்றும் மாலை 4.45 மணிக்கும், நாளை காலை 6.15 , 8 மணிக்கும்ஜெயலலிதாவின் இரங்கல் செய்தி ஒலிபரப்பாகிறது.













Click it and Unblock the Notifications