அறிவியல் தமிழ் பாடம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு ஜெ. கடும் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அறிவியல் தமிழ் பாடத்தைக் கற்றுக் கொடுக்காத மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
அறிவியல் தமிழ் பாடம் கட்டாயப் பாடமாகும். ஆனால் இதை பல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கடைப்பிடிப்பதில்லை எனபுகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
அறிவியல் தமிழ் பாடம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் தமிழின்அடிப்படை கூடத் தெரியாமல் இருந்து வந்தனர். ஆனால் அறிவியல் தமிழ் பாடத்திற்குப் பிறகு இந்த நிலை மாறியது. தமிழ்போதிக்கப்படாத பள்ளியே இல்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளது.
அறிவியல் தமிழ் பாடத்தை போதிக்காத மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications