சிறுமிகள், பெண்களை ஆபாச படம் எடுத்த ராதாகிருஷ்ணன்: வீடியோ கேசட்கள் சிக்கின
சென்னை:
சிறுமிகளை கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை வைத்து ஆபாச படமும் எடுத்துள்ளார் சுங்கத்துறை அதிகாரியானராதாகிருஷ்ணன். இந்தக் காட்சிகள் அடங்கிய 3 வீடியோ கேசட்டுகளும் அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
வாணியம்பாடியிலும் சென்னையிலும் தனது வீட்டுக்கு சிறுமிகளை வரவழைத்து அவர்களுக்கு பாலிலும் உணவிலும் மயக்க மருந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ராதாகிருஷ்ணன் அவர்கள் மயங்கிய நிலையில் இருந்தபோது அவர்களை ஆபாசப் படமும்எடுத்துள்ளார்.
இதில் சிறுமிகள் மட்டுமின்றி மேலும் இரு குடும்பப் பெண்களின் ஆபாச படங்களும் அடக்கம்.
இதில் ஒரு பெண், ராதாகிருஷ்ணனின் உறவுக்காரப் பெண் ஆவார். இன்னொரு பெண் ராதாகிருஷ்ணனின் சக அதிகாரியின் மனைவி என்றுதெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்தப் பெண்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
மேலும் ராதாகிருஷ்ணனின் வீட்டிலிருந்து பல நாட்டு ஆணுறைகள், செக்ஸ் ஊக்கம் தரும் மருந்துகள், போதை மருந்துகளும்கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான ராதாகிருஷ்ணனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியபோது, நான் ஒரு இருதய நோயாளி, அப்பாவி, சிறுமிகளை மிரட்டிபொய் புகார் வாங்கியிருக்கிறார்கள் என்று கதறினார்.
அவரை 22ம் தேதி வரை ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications