காம மிருகம் ராதாகிருஷ்ணன்: வேட்டையாடப்பட்ட சிறுமிகள்
சென்னை:
11 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளைக் குறி வைத்து வேட்டையாடிய காம மிருகம் ராதாகிருஷணன் குறித்து பரபரப்பானதகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதரவற்ற சிறுமிகளை அழைத்துச் சென்று அவர்களிடம் பாலியல் உறவு வைத்திருந்த சுங்கத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் நேற்று கைதுசெய்யப்பட்டார். அந்த காமப் பிசாசு குறித்த முழு விவரம்:
சென்னை சூளைமேடு செளராஷ்டிரா நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (46) சுங்கத்துறை ஊழல் தடுப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராகஉள்ளார். இவரது மனைவி கோமளவல்லி (40), இந்தியன் ஆயில் கார்பொரேசனில் அதிகாரியாக உள்ளார்.
செக்ஸ் வெறியரான ராதாகிருஷ்ணன், சிறுமிகளைக் குறி வைத்து அவர்களை பாலியல் சித்திரவதை செய்து வந்துள்ளார். கணவரின் செக்ஸ்வக்கிரத்தைத் தடுக்க முடியாமல் போனதால் மனமொடிந்து போன கோமளவல்லி, தனது இரு குழந்தைகளுடன் தனியே பிரிந்துபோய்விட்டார்.
இது மிகவும் வசதியாகப் போய்விடவே, ஒன்டிக்கட்டையான ராதாகிருஷ்ணன் முழு ஜோரில் தனது செக்ஸ் வக்கிரத்தில் இறங்கியுள்ளார்.கஸ்டம்ஸ் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி என்பதால், தவறு செய்யும் அதிகாரிகளைப் பிடிப்பது, பின்னர் அவர்களைக் காப்பாற்றலட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவது என பணத்தில் திளைத்துள்ளார் ராதாகிருஷ்ணன்.
கையில் எப்போதும் புரளும் ஏகப்பட்ட பணம், மனைவி பிரிந்து போய்விட்டார், உயர்ந்த பதவி என்ற பாதுகாப்பு. இதையெல்லாம்சாதகமாக்கிக் கொண்டு செக்ஸ் வேட்டையில் ஈடுபட்டு வந்தார் ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் பல இடங்களில் வீடுகள், பண்ணைகளையும் வாங்கிப் போட்டுள்ளார். சொந்த ஊரான வாணியம்பாடியில் பங்களாவைவாங்கியவர், அங்கு சுற்றுப் பகுதி ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு உதவுவதாகக் கூறி பணத்தை வாரி இறைத்துள்ளார்.
குறிப்பாக ஏழை குடும்பத்து சிறுமிகளை தேர்வு செய்து அவர்களது கல்விக்கு, உடைக்கு என பணத்தைத் தந்துள்ளார். சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் வாணியம்பாடி பங்களாவில் வந்து தங்கும் இவர் தன்னிடம் உதவி பெற்று படிக்கும் சிறுமிகளை வீட்டுக்கு வரச்செய்து கல்வி போதிப்பது போல நடித்துள்ளார்.
இதை நம்பி தங்களது மகள்களை இவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெற்றோர். வீட்டில் சிறுமிகளிடம் களியாட்டம் போட்டுள்ளார்.அவர்களுக்கு பாலிலும் உணவிலும் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவர்களிடம் செக்ஸ் வைத்துள்ளார்.
குறிப்பாக 11 முதல் 17 வயது சிறுமிகளையே இவர் தேர்வு செய்து இந்த பலாத்காரத்தை நடத்தி வந்துள்ளார்.
இவ்வாறு இவரிடம் சின்னாபின்னாவான பெண் தான் ஆனந்தி. பிளஸ் ஒன் படிக்கும் ஆனந்தியை சென்னைக்கு தனது வீட்டுக்கு அழைத்துவந்த ராதாகிருஷ்ணன், அவளுக்கு போதை மருந்து கொடுத்து பலம முறை கற்பழித்துள்ளார்.
ஒரு வாரமாக தங்களது மகளை ராதாகிருஷ்ணன் வாணியம்பாடிக்கு திருப்பி அனுப்பாமல் வைத்திருந்ததால் அவரது பெற்றோர்பதற்றமடைந்தனர். ராதாகிருஷ்ணன் குறித்து பிற சிறுமிகளிடம் அவர்கள் விசாரித்தபோது தான் அவரது செக்ஸ் முகம் புரிந்தது.
அவர்கள் பல வாரங்கள் சிரமப்பட்டு, பின்னர் ராதாகிருஷ்ணனின் மனைவி கோமளவல்லி கொடுத்த தகவலை வைத்து ஆனந்தியைமீட்டுள்ளனர். இதையடுத்து ராதாகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார்.
ராதாகிருஷ்ணன் குறித்து தகவல் தெரியவந்தவுடன் அவரைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கவும், இந்த விவகாரம் குறித்து முழுமையாகவிசாரிக்கவும் கமிஷ்னர் நட்ராஜ் உத்தரவிட்டார். கடந்த ஒன்றரை மாதமாக அவரை போலீசார் தேடி வந்தனர்.
இதையடுத்து ராதாகிருஷ்ணனால் பாலியல்ரீதியில் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகளிடம் பெண் போலீசார் உதவியுடன் விசாரணைநடத்தப்பட்டது. அதில் ஆனந்த், பிரேமா, ஜோதி, சுசீலா உள்ளிட்ட 7 சிறுமிகள் ராதாகிருஷ்ணனால் மிகவும் மோசமாக பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது.
அவர்களது வாக்குமூலத்தை வாங்கிய பெண் போலீசார், ராதாகிருஷ்ணனைத் தேடி வலை வீசினர். செங்கல்பட்டில் ஒரு கட்சிப் பிரமுகரின்வீட்டில் பதுங்கியிருந்து கொண்டு, அந்த பிரமுகரின் கட்சிக் கொடி கட்டப்பட்ட காரில் சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தராதாகிருஷ்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications