டிரைவர் கொலை: திமுக எம்எல்ஏவின் மகன் கைது
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே கார் டிரைவரைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் திமுக எம்.எல்.ஏ. உபயதுல்லாவின் மகன் உள்பட 5 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் திமுக எம்.எல்.ஏ.உபயதுல்லாவிடம் கார் டிரைவராக இருந்து வந்தார்.
போலீஸார் காணாமல் போன செந்தில்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இந் நிலையில் ஆறுமுகம் என்பவர் போலீஸ் பிடியில் சிக்கினார்.அவரிடம் விசாரணை நடத்தியபோது, எம்.எல்.ஏ.வின் மகன் ஜாஹிர் உசேன் உத்தரவின் பேரில் செந்தில்குமாரை கடந்த ஜனவரி 21ம் தேதிகொலை செய்து, அவரது உறவினர் ஜின்னா என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து விட்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து கொலை செய்த கும்பலில் இருந்த பிரகாஷ், செந்தில், இளங்கோவன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ஜாஹிர்உசேன் தலைமறைவாகி விட்டார்.
ஜின்னா வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த செந்தில்குமான் உடலைப் போலீஸார் தோண்டி எடுத்தனர். பிணத்திற்கு அருகேபுதைக்கப்பட்டிருந்த, கொலை செய்யப் பயன்படட்ட ஆயுதங்களையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.
தலைமறைவான ஜாஹிர் உசேனை போலீஸார் நேற்று இரவு மதுரை அருகே கைது செய்தனர்.
செந்தில்குமாரைக் கொலை செய்த ஜாஹிர் உசேனின் தந்தையும், எம்.எல்.ஏ.வுமான உபயதுல்லா மற்றும் அவரது குடும்பத்தினரையும் கைதுசெய்யக் கோரி செங்கிப்பட்டியில் இன்று செந்தில்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டுள்ளது.
எம்எல்ஏ உபயதுல்லாவின் மகன் ஜாஹிர் உசேன் அந்தப் பகுதியில் ஓவராக சண்டித்தனம் செய்து வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications