அமெரிக்கா செல்ல வைகோவுக்கு நீதிமன்றம் அனுமதி
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அமெரிக்கா செல்ல பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வைகோ கடந்த 2003ம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஒன்றரை ஆண்டு சிறைவாசத்திற்குப் பின்னர் வைகோமற்றும் மதிமுகவைச் சேர்ந்த 8 பேர் கடந்த ஆண்டு ஜாமீனில் விடுதலை ஆகினர்.
ஜாமீன் நிபந்தனைப்படி வைகோ தனது பாஸ்போர்ட்டை பொடா நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்.
இந் நிலையில், அமெரிக்காவில் உள்ள தனது மகளின் குடும்பத்தினரை சந்திக்க வைகோ அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, வைகோவின் வழக்கறிஞர் தேவதாஸ், கடந்த 4ம் தேதி பொடா நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், வைகோ அமெரிக்கா செல்ல அனுமதி வழங்க வேண்டும். அதற்கு வசதியாக பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி தேவதாஸ் பரிசீலித்து, மே 16ம் தேதி முதல் 3 வார காலம் அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.வைகோவின் பாஸ்போர்ட் வரும் 11ம் தேதி அவரிடம் வழங்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.
பொடாவில் கைதாகி விடுதலையான பிறகு ஏற்கனவே ஒருமுறையும் நீதிமன்ற அனுமதி பெற்று வைகோ அமெரிக்கா சென்று திரும்பியதுகுறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னதாக அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தபோது தான் அவரை விமான நிலையத்திலேயே வைத்து தமிழக அரசு கைதுசெய்தது என்பது நினைவுகூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications