பாஜக தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்: தமிழக அரசுக்கு கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய, மாநில அரசுகளின் போக்கைக் கண்டித்து, அவற்றிற்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட பாரதீயஜனதாக் கட்சி முடிவு செய்துள்ளது.

வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பாஜக கூறி வருகிறது. சட்டசபைத் தேர்தலில்மேற்கொள்ள வேண்டிய நிலை குறித்து முடிவு செய்வதற்காக வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்களும், பாஜகவின்சிந்தனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் தமிழக பாஜக நிர்வாகிகள் தவிர அகில இந்தியத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந் நிலையில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரத்தில்ஈடுபட பாஜக முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தேசியச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான பண்டாரு தத்தாத்ரேயாகூறுகையில்,

சுனாமி நிவாரண நடவடிக்கையில், மத்திய அரசும், மாநில அரசும் முறையாகச் செயல்படவில்லை.

தமிழகத்திலிருந்து மத்தியில் அமைச்சர்களாக உள்ள திமுக, பாமக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சுனாமியால்பாதித்த மக்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர தவறிவிட்டார்கள்.

நிரந்தர வீடு கட்டித் தருவோம் என்று இரு அரசுகளுமே உறுதி கூறின. ஆனால் அந்த உறுதிமொழி காற்றில் பறந்து விட்டது.மீனவர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இடைத் தரகர்களிடம் அவர்கள் ஏமாந்து வருகிறார்கள்.

தமிழக பாஜக தலைவர்களான சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, இல. கணேசன், பொன் ராதாகிருஷ்ணன் போன்றோருக்குவழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.

பாஜக தலைவர்கள் அனைவருக்கும் மிரட்டல் இருந்து வருகிறது. கடந்த 1991ம் ஆண்டு முதல் 100க்கும் மேற்பட்ட சங் பரிவார்அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் பாதுகாப்பை வாபஸ் பெற்றிருப்பதுதுரதிர்ஷ்டவசமானது.

வாஜ்பாய், அத்வானி மீது ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் குற்றம் சாட்டியிருப்பதற்கு டெல்லி தலைவர்கள் ஏற்கனவேபோதுமான பதிலை அளித்துவிட்டனர். எனவே நான் கருத்து சொல்ல ஏதுமில்லை என்றார் தத்தாத்ரேயா.

சென்னையில் 2 நாள் நடைபெறும் சிந்தனைக் கூட்டத்தில், கட்சியின் அகில இந்தியத் துணைத் தலைவரான வெங்கையா நாயுடு,பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி, சஞ்சய் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

சட்டசபைத் தேர்தல் தவிர கூட்டணி அமைப்பது குறித்தும், அதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் இக்கூட்டத்தில்விவாதிக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+