அமெரிக்காவில் இளங்கோவன்: வர்த்தக கூட்டத்தில் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

பொருளாதார தாராள மயமாக்கலுக்குப் பிறகு இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தில் பெரும் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கா சென்றுள்ள மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் இளங்கோவன் கூறினார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ), இந்திய-அமெரிக்க வர்த்தக கவுன்சில் மற்றும் சர்வதேச நிதிக் கழக் கழகம்ஆகியவை இணைந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இந்தியா கனெக்ட் என்ற வர்த்தக நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்துள்ளன. இதில் பங்கேற்க இளங்கோவன் அமெரிக்கா சென்றுள்ளார்.

வாஷிங்டனில் நடந்த இந்தியா கனெக்ட் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவில்பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைளை அறிமுகப்படுத்தியவர் மன்மோகன் சிங். இப்போது பிரதமர் என்ற முறையில் அக்கொள்கைகளை அவர் முழுமையாக அமல்படுத்தி வருகிறார்.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இதில் மேலும் சில தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டியுள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இரு நாடுகளும் பல்வேறுமதங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள் கொண்டவை.

இந்தியா இப்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வளர்ச்சி விகிதத்தை 7 முதல் 8 சதவீதமாக்க நாங்கள்கடும் முயற்சி எடுத்து வருகிறோம். இதற்காக நாங்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதில்சந்தேகமில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+