அடுத்த மாதம் காஞ்சி, கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல்?
டெல்லி:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் மே மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.
காஞ்சிபுரம் அதிமுக எம்.எல்.ஏ. திருநாவுக்கரசு, கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் ஆகியோரின் மறைவைத்தொடர்ந்து அந்த இரு தொகுதிகளும் காலியாக உள்ளன.
இவற்றிற்கு இடைத் தேர்தல் நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. முதலில் வாக்காளர்பட்டியல் சரி பார்க்கப்பட்டது. அதன் பின்னர் இரு தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்றுகருத்தறிந்தனர்.
இந் நிலையில், இடைத் தேர்தல் குறித்து மத்திய தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூறுகையில், இரு தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்த குழு தங்களது அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளனர்.
காலியாகவுள்ள தொகுதிகளில் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. எனவே அந்த விதியை தேர்தல்ஆணையம் மீறாது. விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றார் கோபால்சாமி.
காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. திருநாவுக்கரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி மரணமடைந்தார். எனவே மே 21ம் தேதிக்குள்இத்தொகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. எனவே நிச்சயம் மே மாதம் மத்திக்குள் இங்கு இடைத் தேர்தல்நடத்தப்படும் என தெரிகிறது.
கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. சுதர்சனம் ஜனவரி மாதம் 9ம் தேதி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications