மொபைல் போனில் மாணவிக்கு ஆபாச படம்: 3 பிஇ மாணவர்கள் கைது
சேலம்:
சேலத்தில் மருத்துவ கல்லூரி மாணவிக்கு செல்போன் மூலம் ஆபாச படம் அனுப்பிய 3 கல்லூரி மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சேலத்தை சேர்ந்தவர் நவீதா. இவர் இங்குள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன்படித்த சித்தார்த்தன் என்ற மாணவர் தற்போது காரைக்காலில் படித்து வருகிறார்.
முதலில் சிவா பேசியதை நவீதா சகஜமாக எடுத்துள்ளார். ஆனால் நாளடைவில் சிவாவின் பேச்சு எல்லை மீறியது. சிவாவின் சிலநண்பர்களும் நவீதாவை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளனர். ஆபாச எஸ்.எம்.எஸ்களையும் அனுப்பி வந்துள்ளனர்.மேலும் ஆபாச படங்களையும் அனுப்ப ஆரம்பித்தனர்.
இதனால் வெறுப்படைந்த நவீதா தனது தந்தையிடம் இது குறித்து கூறினார். அவர் சேலம் போலீஸில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், செல்போன் மாணவர்களுக்கு வலைவீசினர்.
தீவிர விசாரணையில் சேலத்தை சேர்ந்த சிவா, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கவுதம், திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவினோத் ஆகிய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் பாண்டிச்சேரி ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் மீது 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications