10 மாத குழந்தையை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல்:
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு பெற்றெடுத்த 10 மாதக் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனைவிதித்து திண்டுக்கல் முதலாவது விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 24 நாட்களில் இந்த வழக்கை விசாரித்து திண்டுக்கல் நீதிமன்றம்தீர்ப்பளித்து சாதனை படைத்துள்ளது.
கல்யாணமான 10 மாதங்களுக்குள்ளாகவே யுவராணிக்குக் குழந்தை பிறந்தது. இதையடுத்து யுவராணி மற்றும் அவருடைய தாயாருடன்குப்புசாமி சண்டை போட ஆரம்பித்தார். யுவராணியின் நடத்தை குறித்து அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந் நிலையில் பிரசவத்திற்காக தாய் வீடு சென்றிருந்த யுவராணி, குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக அண்ணாமலைப்புதூர்வந்திருந்தார். அப்போது, மார்ச் 16ம் தேதி, குப்புசாமி தனது மகளை தூக்கி கிணற்றில் போட்டு கொலை செய்தார்.
இந்தக் கொலை வழக்கு திண்டுக்கல் முதலாவது விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 24 நாட்களுக்குள் வழக்குவிசாரிக்கப்பட்டு, குப்புசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications