விடைபெறுகிறார் எளிமையின் சின்னம்" நல்லகண்ணு
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியில் கடந்த 4 முறையாக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நல்லகண்ணுஇன்றுடன் விடைபெறுகிறார். புதிய செயலாளரைத் தேர்வு செய்ய கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று சென்னையில்நடைபெறுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளரான நல்லகண்ணு பல ஆண்டுகளாகவே பதவி விலக ஆர்வம் காட்டி வருகிறார்.இளையவர்களுக்கு வழி விட்டு பதவி விலக அவர் விரும்பினாலும், அவரது அயராத உழைப்பையும் கட்சிப் பணியையும் மதித்துஅவரையே தொடர்ந்து இப் பதவியில் இருக்கச் செய்தது கட்சியின் தலைமை.
நல்லகண்ணுவுக்காக கட்சியின் விதிகள் கூட தளர்த்தப்பட்டன. ஆனால், இம்முறை பதவி விலகுவதில் அவர் தீர்க்கமாக உள்ளார்.இதையடுத்து அவர் ஓய்வு பெறுகிறார்.
புதிய செயலாளராக மகேந்திரன், தா.பாண்டியன், எஸ்.எஸ்.தியாகராஜன் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் தான் இன்று வரை எளிமையும் நேர்மையும் மிச்சமுள்ளது. இதில், மகா எளிமைக்குப்பெயர் போனவர் நல்லகண்ணு. இன்று வரையிலும் பஸ்சிலும் ஆட்டோவிலும் பயணம் செய்யும் அரசியல்வாதி இவர்.












Click it and Unblock the Notifications