ஆண்டுதோறும் அமெரிக்க விசா கோரும் 5 லட்சம் இந்தியர்கள்
பெங்களூர்:
அமெரிக்கா செல்ல விசா கோரி ஆண்டுதோறும் 5 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பம் செய்வதாகவும், இதில் 55,000 பேருக்கும் மட்டுமேவிசா வழங்கப்படுவதாகவும் அந் நாட்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் நார்மன் மினேடா தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விமானப் போக்குவரத்தில் ஓபன்-ஸ்கை பாலிஸி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இதனால் இரு நாட்டு விமான நிறுவனங்களும் பரஸ்பரம் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்துக்கும் விமான சேவையை நடத்த முடியும்.
அமெரிக்கா செல்ல ஆண்டுதோறும் 4 முதல் 5 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால், விண்ணப்பிக்கும் ஒவ்வொருவரிடமும்நேர்முகத் தேர்வு நடத்த வேண்டியுள்ளது. இதனால் 55,000 பேருக்கு மட்டுமே விசா வழங்க முடிகிறது. கூடுதலாக விசா வழங்குவதற்குஆள் பலமும், கட்டமைப்பும் இல்லை.
விரைவில் விசா வழங்கும் பணிகளில் கூடுதலாக ஆட்கள் சேர்க்கப்படுவார்கள். சென்னை தூதரகத்தில் மட்டும் விசா வழங்க 20அதிகாரிகள் உள்ளனர். அங்கு விரைவில் 3 கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர் என்றார்.
இந்தியாவிலேயே சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தான் அதிக அளவில் விசா வழங்கி வருகிறது. சென்னை, பெங்களூர்,ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜியர்களுக்கு இந்தத் தூதரகம் மூலமே விசா வழங்கப்படுகிறது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |