சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி: பாஜக அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைக்கு நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சியின் துணைத் தலைவர்வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.
இதில் அகில இந்தியத் தலைவர்களான வெங்கையா நாயுடு, பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இன்றைய கூட்டத்திற்குப் பின்னர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப்போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்வதில்லை என்றும்தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சியை கிராமப்புற அளவில் வலுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின்அடிமட்டத் தொண்டர்களை ஊக்குவித்து கட்சிக்கு வலுவூட்ட நடவடிக்கை மேற்கெள்ளப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications