இந்திய கம்யூ. செயலாளராக தா.பாண்டியன் தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக தா.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்து வந்த நல்லகண்ணு, நீண்ட காலம் அப்பதவியில் இருந்து வந்தார். இந்த நிலையில்அவருக்குப் பதில் புதிய செயலாளரை தேர்வு செய்வதற்காக கட்சியின் மாநில குழுக்கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமைகூடியது.

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகக் குழுவுக்கு நல்லகண்ணு உள்பட 31 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் தா.பாண்டியன்மாநிலச் செயலாளராகவும், மகேந்திரன், பேரின்பன் ஆகியோர் உதவிச் செயலாளர்களாகவும், தாவூத் பொருளாளராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.

தஞ்சை மண்டல திமுக மாநாடு இன்று காலை தஞ்சாவூர் -புதுக்கோட்டை சாலையில் உள்ள மேலவஸ்தா சாவடி என்ற இடத்தில்தொடங்குகிறது.

நாகூர் ஹனீபா இசைக் கச்சேரியுடன் தொடங்கும் மாநாட்டில் கவிஞர் நிர்மலா சுரேஷ் கொடியேற்றி வைத்துப் பேசுகிறார். பின்னர்மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் கோ.சி.மணி வரவேற்புரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து மாநாட்டை திமுக துணைப் பொதுச்செயலாளர் பரிதி இளம்வழுதி திறந்து வைக்கிறார்.

பின்னர் துரைமுருகன் தலைமையில் மாநாடு தொடங்குகிறது. பல்வேறு தலைவர்கள் பேசுகிறார்கள். மாலை 4 மணிக்குதீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன. பொதுச்செயலாளர் அன்பழகன் இரவு நிறைவுரையாற்றுகிறார்.

2வது நாளான நாளை துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பேசுகிறார்கள். பின்னர் மாலை 5மணிக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்குகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நல்லகண்ணு,வரதராஜன், ஆர்.எம்.வீரப்பன், டாக்டர் சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இரவு 8 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி நிறைவுரையாற்றுகிறார். மாநாட்டையொட்டி பிரமாண்ட மேடையும், வரவேற்புவளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. நகரெங்கும் திமுக சார்பில் அலங்கார வளைவுகளும், தோரணங்களும்அமைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+