தப்பி ஓடிய ராதாகிருஷ்ணன்; மடக்கிப் பிடித்த போலீஸ்
சென்னை:
காம வெறியன் ராதாகிருஷ்ணன் போலீஸ் விசாரணையின்போது திடீரென்று தப்பி ஓடினார். அவரை போலீஸார் விரட்டிச் சென்றுமடக்கிப் பிடித்தனர். தப்பிய ஓடியதற்காக மற்றொரு வழக்கை போலீஸார் ராதாகிருஷ்ணன் மீது பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் காவல் முடிந்து அவரை நேற்று மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு போலீஸார் கொண்டு வந்துகொண்டு வருவதாக கூறியிருந்தனர். ஆனால் 4.30 மணிக்குத்தான் போலீஸார் ராதாகிருஷ்ணனுடன் வந்து சேர்ந்தனர்.
தாமதத்திற்கான காரணம் குறித்து நீதிபதி கேட்டபோது, தங்களது காவலில் இருந்த ராதாகிருஷ்ணன் திடீரென தப்பி ஓடிவிட்டதாகவும், அவரை துரத்திப் பிடித்துக் கொண்டு வருவதற்கு தாமதமாகி விட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
சூளைமேட்டில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்வதற்காக இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி போலீஸ்ஜீப்பில் ராதாகிருஷ்ணனை கொண்டு சென்றுள்ளார். சூளைமேடு நெடுஞ்சாலையில் ஜீப் போனபோது திடீரென ராதாகிருஷ்ணன்கீழே குதித்து தப்ப முயன்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஜீப்பில் இருந்த போலீஸாரும், சாலையில் சென்ற பொதுமக்களும் சேர்ந்து ராதாகிருஷ்ணனை மடக்கிப்பிடித்தனர். பின்னர் சூளைமேடு காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் தப்பிச் செல்ல முயன்றது குறித்து இன்ஸ்பெக்டர்மங்கையர்க்கரசி புகார் கொடுத்துள்ளார்.
கிட்டு வாக்குமூலம்:
அதன் அடிப்படையில் ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.கிட்டு வாக்குமூலம்:
இதற்கிடையே, ராதாகிருஷ்ணனுக்கு சிறுமிகளை சப்ளை செய்த புரோக்கர் கிட்டு பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட கிட்டு போலீஸாரிடம் கூறுகையில்,
குழந்தைகளைத் தத்து எடுப்பதாக கூட்டி வந்து ராதாகிருஷ்ணனுக்கு பலி கொடுத்து விட்டேன். 20 குழந்தைகள் வரை இவ்வாறுகூட்டி வந்து விட்டுள்ளேன்.
கருப்பான, இளம் சிவப்பு நிறத்திலான சிறுமிகள்தான் ராதாகிருஷ்ணனுக்குப் பிடிக்கும். வாரம் ஒரு சிறுமியை நான் இவ்வாறுகூட்டி வருவேன். சனிக்கிழமைதோறும் தனது பண்ணை வீட்டிற்கு ராதாகிருஷ்ணன் வருவார்.
வந்தவுடன், இன்னைக்கு கண்டிப்பாக விருந்து வேண்டும் என்று சங்கேதமாக கூறுவார். விருந்து என்றால் சிறுமி என்று பொருள்.
நானும் ஏதாவது ஒரு சிறுமியை கூட்டி வந்து விடுவேன். சிறுமியைப் பார்த்ததும் மிகவும் பாசமாக பேசி, நீ எனது மகள் மாதிரி,உன்னை நான் தத்தெடுத்து விட்டேன் என்று கூறி தனது மடியில் உட்கார வைத்துக் கொள்வார் ராதாகிருஷ்ணன்.
அப்படிஉட்காரும் சிறுமிகளிடம் மிகவும் எளிதாக தனது காரியத்தை முடித்து விடுவார். உட்கார மறுக்கும் சிறுமிகளுக்கு பாலில்மயக்க மருந்து கொடுத்து பின்னர் காரியத்தை முடிப்பார்.
ராதாகிருஷ்ணன் தூக்கி எறியும் 100 ரூபாய் நோட்டுக்களுக்கு ஆசைப்பட்டு நான் செய்த பாவத்தால் இப்போது மாட்டிக் கொண்டுவிட்டேன் என்று கூறியுள்ளார் கிட்டு.
எங்கே ஜோதி?:கிட்டுவைப் போலவே, ஜோதி என்ற தெலுங்குப் பெண்ணும் ராதாகிருஷ்ணனுக்கு பலவகையில் உதவியாக இருந்திருக்கிறார்.இந்தப் பெண்ணுக்கு ஏராளமான பணம், நகைகள், சேலைகள் ஆகியவற்றை கொடுத்திருக்கிறார் ராதாகிருஷ்ணன்.
அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஜோதியை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்சிக்கினால் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications