கிரிக்கெட்: இந்தியா வந்தார் முஷாரப்
டெல்லி:
டெல்லியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் கடைசி ஒரு நாள் போட்டியை பார்ப்பதற்காக பாக். அதிபர் முஷாரப் இன்று இந்தியாவந்தார். இஸ்லாமாபாத்திலிருந்து புறப்பட்டு ஜெய்ப்பூர் வந்த அவரை விமான நிலையத்தில் ராஜஸ்தான் மாநில முதல்வர்வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதற்காக இஸ்லாமாபாத்திலிருந்து அவர் இன்று பிற்பகல் புறப்பட்டார். விமான நிலையத்தில் முஷாரப்பை பாகிஸ்தான் பிரதமர்ஷவுக்கத் அஸீஸ், பாகிஸ்தானுக்கான இந்திய துணைத் தூதர் ராகவன் மற்றும் ராணுவ அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
முஷாரப்புடன் அவரது மனைவி ஷேபாவும் புறப்பட்டார். இஸ்லாமாபாத்திலிருந்து புறப்பட்ட அவர், 3 மணியளவில் ஜெய்ப்பூர்வந்தார். விமான நிலையத்தில் முஷாரப்பை ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா, இந்தியாவுக்கானபாகிஸ்தானின் தூதர் அஸீஸ் அகமது கான் மற்றும் பலர் வரவேற்றனர்.
ஜெய்ப்பூரிலிருந்து இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் முஷாரப்பும், அவரது மனைவியும் அஜ்மீர் புறப்பட்டு சென்றனர்.அங்குள்ள சூபி காஜா மொய்னுதீன் கிஸ்தி தர்காவில் முஷாரப்பும், அவரது மனைவியும் பிரார்த்தனை செய்கின்றனர். இதன் பிறகுமாலையில் இருவரும் டெல்லி வருகின்றனர்.
முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு:
டெல்லியில் தாஜ் மான்சிங் ஹோட்டலில் முஷாரப் தங்குகிறார். இரவு 7.30 மணியளவில் வெளியுறவுத் துறை அமைச்சர்நட்வர்சிங், முஷாரப்பை சந்தித்து பேசுகிறார். இதன் பிறகு இரவு 8.30 மணியளவில் முஷாரப் மற்றும் அவருடன் வரும்குழுவினருக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரவு விருந்து அளிக்கிறார்.
நாளை காலை 9 மணியளவில் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக முஷாரப், டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்திற்குஹெலிகாப்டரில் வருகிறார். பிறகு 10.45 மணியளவில் ஐதராபாத் இல்லத்தில் மன்மோகன் சிங்-முஷாரப் சந்திப்பு நடக்கிறது.
பிறபகல் 1 மணிக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, முஷாரப் சந்திக்கிறார். அதன் பிறகு எதிர்கட்சி தலைவர் அத்வானி,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார். திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் டெல்லியிலிருந்து முஷாரப்பிலிப்பைன்ஸ் புறப்பட்டு செல்கிறார்.
முஷாரப் வருகையையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெனாஸிரின் கணவர் லாகூர் வருகை:
இதற்கிடையே நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் கணவர் ஆஸிப்அலி சர்தாரி, துபாயிலிருந்து இன்று லாகூர் வந்தார். இதையொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சர்தாரியை வரவேற்பதற்காக லாகூர் விமான நிலையத்தில் பெனாஸிர் பூட்டோவின் கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானதொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் லாகூரில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. இதையொட்டி நூற்றுக்கணக்கான சர்தாரியின் ஆதரவாளர்களை போலீஸார் கைதுசெய்தனர். சர்தாரி லாகூர் வந்திறங்கியதும் அவரை போலீஸார் தங்களது வாகனங்களில் அழைத்து சென்று அவரது வீட்டில்விட்டனர்.
சர்தாரிக்கு பாகிஸ்தான் திரும்ப அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ள போதிலும், பெனாஸிர் பூட்டோவுக்கு நாடு திரும்பஇன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. அவர் தற்போது லண்டனில் உள்ளார்.












Click it and Unblock the Notifications