மீனாட்சி கோவிலில் குண்டு: பெண் உள்பட 5 பேர் கைது
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்குக் கோபுரம் அருகே உள்ள செருப்புக் கடையில் வெடிகுண்டுகளை வைத்த பெண்உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில் கோவிலில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.வெடிகுண்டுகளை வைத்த நபர்களைப் பிடிக்க காவல்துறை ஆணையர் விஜயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்துபோலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
செருப்புக் கடை அருக பூஜைபொருட்கள் விற்கும் கடையை வைத்திருந்த துரைப்பாண்டியின் மகள் கவிதா, வெடிகுண்டு வைத்தநபர்கள் குறித்த சில அடையாளங்களைக் கூறியிருந்தார்.
அந்தத் தகவல்களின் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் படம் வரைந்து குற்றவாளிகளை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்தனர்.இதன் விளைவாக தற்போது ஒரு பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆணையர் விஜயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், துரைப்பாண்டி, அவரது மனைவி தமிழ்ச் செல்விஆகியோருக்கும், எதிரே பிளாட்பாரத்தில் பூஜை பொருட்கள் விற்கும் கடையை வைத்திருந்த பூங்கொடி அவரது கணவர் ஆறுகம்ஆகியோருக்கு இடையே ஏற்கனவே தொழில் பாட்டி இருந்து வந்தது.
இதுதொடர்பாக கடந்த மார்ச் 7ம் தேதி இரு தரப்பினரும் மோதிக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக துரைப்பாண்டியும், அவரதுமனைவியும் மீனாட்சி அம்மன் கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் பூங்கொடி,ஆறுமுகம் மீது வழக்கும் பதிவாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடியும், ஆறுகமுகமும், துரைப்பாண்டி தம்பதியை பழி தீர்க்க யோசித்துள்ளனர். அப்போதுஅவர்களது உறவினர் பூபதி என்பவர், துரைப்பாண்டி கடையில் வெடிகுண்டுகளை வைத்து போலீஸில் மாட்டி விடலாம் என்றுயோசனை தெரிவித்துள்ளார். இதை பூங்கொடியும், ஆறுமுகமும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் துளசி, ஜெயக்குமார் ஆகியோரை பூபதி அழைத்து வந்துள்ளான்.அனைவரும் கூடிப் பேசி 2 நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து அதை துரைப்பாண்டியின் கடையில் வைத்து விட்டுபோலீஸுக்குத் தகவல் சொல்லலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, துளசியிடம் பூங்கொடி ரூ. 300 கொடுத்து வெடிகுண்டுகளைத் தயாரிக்க கூறியுள்ளார். பணத்தை வாங்கிக்கொண்ட துளசியும், ஜெயக்குமாரும், நேதாஜி சாலையில் உள்ள ஒரு பட்டாசுக் கடைக்குச் சென்று பட்டாசுகள் வாங்கியுள்ளார்.
பின்னர் ஜெயக்குமாரின் வீட்டுக்கு அவர்கள் சென்றனர். அங்கு வைத்து நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளனர். பின்னர்அந்த வெடிகுண்டுகளை துணியால் சுற்றி மஞ்சள் பையில் வைத்து ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளனர்.
அவரும், பூஜை பொருட்களை வாங்கப் போவது போல துரைப்பாண்டியின் கடைக்குச் சென்று யாருக்கும் தெரியாமல்வெடிகுண்டுகளை அவரது கடைக்குள் வைத்து விட்டுச் சென்று விட்டார்.
இதைத் தொடர்ந்து துளசியே போலீஸாருக்குப் போன் செய்து துரைப்பாண்டி கடையில் வெடிகுண்டுகள் இருப்பதாக கூறுயுள்ளார்.இதைத் தொடர்ந்து போலீஸார் வந்து சோதனை நடத்தியபோதும், துளசியே முன்வந்து உதவுபவர் போல நடித்துள்ளார்.
ஆனால் அவர் மீது சந்தேகமடைந்த க்யூ பிரிவு போலீஸார் துளசியை தீவிரமாக விசாரித்தபோது மேற்சொன்ன தகவல்கள்கிடைத்தன. இதையடுத்து பூங்கொடி, ஆறுமுகம், துளசி, ஜெயக்குமார், பூபதி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
ஜெயக்குமாரின் வீட்டில் மீதமிருந்த வெடி மருந்துகள், கண்ணாடித் துண்டுகள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர்.
ஏற்கனவே, கராத்தே பாண்டியராஜ் என்பவரைக் கொன்ற கும்பலுக்கும் ஜெயக்குமார், துளசிதான் நாட்டு வெடிகுண்டுகளைத்தயாரித்துக் கொடுத்ததும் தெரியவந்துள்ளது என்று ஆணையர் விஜயக்குமார் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications