இந்தியா-பாக்.இடையே வர்த்தகத்தை மேம்படுத்த குழு
டெல்லி:
டெல்லியில் பாகிஸ்தான் அதிபர் முஷாரப், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்குஇடையே வர்த்தகத்தை மேம்படுத்த குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
3 நாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் அதிபர் முஷாரப் நேற்று இந்தியா வந்தார். அவருடன் அவரது மனைவி ஷேபாவும் வந்தார்.நேற்று மாலை ஜெய்ப்பூர் வந்த அவர்கள், அஜ்மீர் சென்று அங்குள்ள காஜா மொய்னுதீன் கிஸ்தி தர்காவில் பிரார்த்தனை நடத்தினர்.
இதன்பிறகு அவர் தாஜ்மகால் ஹோட்டலுக்கு புறப்பட்டு சென்றார். இரவில் முஷாரப் மற்றும் அவருடன் வந்துள்ள குழுவினருக்குபிரதமர் மன்மோகன் சிங் அசோகா ஹோட்டலில் விருந்து அளித்தார்.
இன்று காலை 9 மணியளவில் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக முஷாரப் அவரது மனைவியுடன் வந்தார். பிரதமர்மன்மோகன் சிங்கும் அவரது மனைவியுடன் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்தார்.
சுமார் 90 நிமிடங்கள் முஷாரப்பும், மன்மோகன் சிங்கும் கிரிக்கெட் போட்டியை பார்த்தனர். இதன்பிறகு இருவரும் ஐதராபாத்மாளிகைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை மேம்படுத்தவும், ராஜஸ்தான் மாநிலம் முன்னாபாவ்,பாகிஸ்தானிலுள்ள கோரக்பர் இடையே ரெயில் போக்குவரத்தை ஏற்படுத்தவும் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், ராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலர் ஷியாாம் சரண், பாகிஸ்தான்வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிறந்த நாள் சான்றிதழ்:
சுமார் 2 மணிநேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. பேச்சு வார்த்தை முடிந்த பிறகு முஷாரப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள் சான்றிதழை வழங்கினார். முஷாரப்பும், அவரது ஒரு அண்ணன் மற்றும் சகோதரி ஆகியோர் பழைய டெல்லியிலுள்ளஹவேலி பகுதியில் பிறந்தனர்.
இவர்கள் யாருக்கும் அவரது தந்தை பிறந்த நாள் சான்றிதழ் வாங்கவில்லை. இதனால் முஷாரப் இந்தியா வரும்போது அவர்கள்அனைவருக்கும் பிறந்த நாள் சான்றிதழை வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி முஷாரப்பிடம் 3 பேருடைய பிறந்த நாள் சான்றிதழையும் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications