சென்னை: ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளை!
சென்னை:
சென்னை நகரில் ஒரே நாளில் 4 வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ள இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை நகரில் நாளுக்கு நாள் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பூட்டிய வீடுகளைத் தான் கொள்ளையர்கள் குறிவைத்து கொள்ளை அடிக்கிறார்கள்.
கெல்லீஸ் குட்டியப்பன் தெருவில் ராணி அபார்ட்மென்ட்ஸ் என்ற அடுக்கு மாடிக் குடியிருப்பு உள்ளது. இதில் 9வது பிளாக்கில்முதல் மாடியில் ஐ.சி.எப்பில் வேலை பார்க்கும் கார்த்திகேயன் என்பவரது பிளாட் உள்ளது. 2வது மாடியில் காஸ் ஏஜென்சி நடத்திவரும் பாலு தயானந்தன் என்பவரது பிளாட் உள்ளது.
இருவரும் சனிக்கிழமை பணிக்குச் சென்றிருந்தபோது, இருவரின் குடும்பத்தாரும் அண்ணா நகர் டவர் பூங்காவிற்குகுழந்தைகளுடன் சென்றிருந்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு வீடு திரும்பினர்.
வீட்டின் முன் பக்க கதவைத் திறந்து உள்ளே சென்ற அவர்கள் பீரோ திறந்து கிடப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர். பீரோவைபார்த்தபோது அதில் வைத்திருந்த நகை, பணம் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.
பின் பக்க கிரில் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து திருடியது தெரியவந்தது. பாலு தயானந்தன் வீட்டில் இருந்த40 பவுன் நகை, 1.04 லட்சம் ரொக்கம் ஆகியவையும், கார்த்திகேயன் வீட்டில் 12 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவைதிருடப்பட்டுள்ளது.
இதேபோல, விருகம்பாக்கம் சாந்த நகரைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரது வீட்டில், குடும்பத்துடன் மும்பை எக்ஸ்பிரஸ் படம்பார்க்கச் சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 10,000 ரொக்கம் ஆகியவைதிருட்டுப் போயிருந்தது.
வியாசர்பாடி கோல்டன் காம்ப்ளக்ஸ் குடியிருப்பில் வசிக்கும் ஜெயராமன் என்பவரின் குடும்பத்தினர் குடும்பத்துடன்திருவல்லிக்கேணிக்கு சாமி கும்பிட சென்றிருந்தனர்.
அப்போடு வீடு புகுந்த திருடர்கள், அங்கு இருந்த 5 பவுன் நகைகள், ரூ. 1500 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
ஒரே நாளில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவங்களை துப்பு துலக்குவதற்காக தனிப்படைகளை அமைக்க காவல்துறைஆணையர் நடராஜ் உத்தரவிட்டுள்ளார். இரவு ரோந்துப் பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications