17 தேர்தல் ஊழியர்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
சென்னை மாநகராட்சி வார்டு இடைத் தேர்தலில் பணியாற்ற நியமிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மற்றும் தேர்தல்பயிற்சிக்கு வராத 17 ஊழியர்களை நீக்கி விட்டு இடைத் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதில், மாநகராட்சி இடைத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள 43 தேர்தல் ஊழியர்களும் அதிமுக சார்பான அண்ணாதொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
அதை விசாரித்த நீதிபதி ரவிராஜபாண்டியன், தேர்தல் ஊழியர்கள் 43 பேரும் செயல்படுவதற்குத் தடை விதித்தார். இதை எதிர்த்துஅரசுத் தரப்பில் உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர், தனி நீதிபதியின் தடை உத்தரவுக்குஇடைக்காலத் தடை விதித்தனர். இன்று மீண்டும் இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட 43 பேரில்3 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள், 10 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.
மேலும் 4 பேர் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகளுக்கு வரவில்லை. எனவே மொத்தமாக இந்த 17 பேரையும் நீக்கி விட்டுமற்றவர்களை வைத்து தேர்தலை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்.
இந்த யோசனையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மற்றும் தேர்தல் பயிற்சிவகுப்புகளுக்கு வராத 17 பேரைத் தவிர மற்றவர்களை வைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications