மகளின் கற்பைக் காக்க கணவரைக் கொன்ற பெண்!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

சொந்த மகளாக கருத வேண்டிய பெண்ணை மானபங்கப் படுத்த 2வது கணவர் முயன்றதால், ஆத்திரமடைந்த பெண், கணவரைகொலை செய்து பிணத்தை வயலில் புதைத்தார்.

நெல்லை, மேலப்பாளையத்தில் உள்ள பீடிக் கம்பெனியில் காவலாளியாக இருந்து வந்தவர் முருகன். இவரது மனைவிபேச்சியம்மாளுக்கு ஏற்கனவே ஒருவருடன் கல்யாணமாகி முத்துச் செல்வி என்ற 18 வயது மகள் உள்ளார்.

முதல் கணவரைப் பிரிந்து முருகனைக் கல்யாணம் செய்து கொண்ட பேச்சியம்மாளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

முருகன் குடிகாரர். அடிக்கடி குடித்து விட்டு பேச்சியம்மாளுடன் தகராறு செய்து வந்தார். குடி போதையில் காமவெறி தலைக்கேற,முத்துச் செல்வியிடம் தவறாக நடக்க பல முறை முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த பேச்சியம்மாள், முருகனைக்கண்டித்தள்ளார். ஆனால் அவர் திருந்துவது போலத் தெரியவில்லை.

இதையடுத்து தனது சகோதரி லட்சுமியின் கணவர் பாலகிருஷ்ணனை அணுகி, தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொடுக்குமாறு கோரியுள்ளார். இதையடுத்து மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிய பாலகிருஷ்ணனும், லட்சுமியும் அடிக்கடிஇதுதொடர்பாக பேச்சியம்மாள் வீட்டுக்கு வந்து சென்றனர்.

அப்போது லட்சுமியிடமும் தவறாக நடக்க முயன்றுள்ளார் முருகன். இது பேச்சியம்மாளுக்கும், பாலகிருஷ்ணனனுக்கும் பெரும்ஆத்திரத்தைக் கிளப்பியது. இதையடுத்து இருவரும் இரவு முருகனுக்கு மது வாங்கிக் கொடுத்து மயக்கமடையச் செய்தனர்.

அதன் பின்னர் இருவரும் சேர்ந்து பாறாங்கல்லால் தலையில் அடித்து முருகனைக் கொலை செய்தனர்.பிறகு முருகனின் உடலை,அவர்கள் வசித்து வந்த குடிசைக்குப் பின்னால் உள்ள வயலில் புதைத்தனர். அதன் பிறகு கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்றுசரண் அடைந்தனர்.

இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பேச்சியம்மாளையும், பாலகிருஷ்ணனையும் கைதுசெய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+