பர்னாலா மீது கருணாநிதி அதிருப்தி!
சென்னை:
சென்னை மாநகராட்சி இடைத் தேர்தல் குறித்து ஆளுநர் பர்னாலாவிடம் மனு கொடுத்தும் அவர் உரியநடவடிக்கை எடுக்காத காரணத்தால், வன்முறை ஏற்பட்டு விட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி அதிருப்திதெரிவித்துள்ளார்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர்செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், சென்னை மாநகராட்சி வார்டு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர்வன்முறைக்கு திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் யாருமே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆளுங்கட்சியினர் வன்முறையில்ஈடுபட்டு ஜனநாயகத்தைப் படுகொலை செய்துள்ளனர்.
ராம்மோகன் ராவ் இருந்தபோதும் இதே நிலைதான் இருந்தது. பர்னாலா நியமிக்கப்பட்ட பிறகும் நிலைமைமாறவில்லை. அவர்களால் அதிகம் செயல்பட முடியாது. அறிக்கை தயாரிக்க மட்டுமே அவர்களுக்கு அதிகபட்சஅதிகாரம் உள்ளது.
அமைச்சர் வளர்மதி கே.கே.நகரில் உள்ள ஒரு பூத்துக்குள் நுழைந்து திமுக ஏஜென்டுகளை கழுத்தில் கையைவைத்து வெளியே தள்ளியுள்ளார். அவரை போலீஸார் ஒன்றும் செய்யவில்லை.
அதேபோல கராத்தே தியாகராஜன், வெற்றிவேல், சேகர் பாபு எம்.எல்.ஏ. ஆகியோரும் பூத்துக்குள் நுழைந்துரகளையில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீஸார் ஒன்றும் செய்யவில்லை.
ஆனால் ஆயிரம் விளக்குக் காவல் நிலையம் அருகே சென்றதற்காக திமுக எம்.எல்.ஏ. அன்பழகனை போலீஸார்கைது செய்துள்ளனர்.
மதுரை, கோவை ஊராட்சி தேர்தல்களிலும் வன்முறை நடந்துள்ளது. அங்கும் போலீஸார் அமைதியாக வேடிக்கைபார்த்துள்ளனர்.
சட்டசபை இடைத் தேர்தலிலும் இதேபோல வன்முறையில் ஈடுபட ஜெயலலிதா அரசு நினைத்தால் அதை நாங்கள்வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications