சென்னை கிரிக்கெட் சங்க பொது மேலாளர் மாயம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) பொது மேலாளர் ஸ்ரீதரனைக் காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சென்னை நங்கநல்லூரில் வசிப்பவர் ஸ்ரீதரன். இவர் சென்னை கிரிக்கெட் கிளப்பில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு மனைவி, மகன் உள்ளனர்.
அதன் பிறகு அவர் அலுவலகத்திற்கும் திரும்பவில்லை, வீட்டுக்கும் செல்லவில்லை. அவர் எங்கு போனார் என்பதுதெரியவில்லை. இதுதொடர்பாக கிரிக்கெட் சங்கம் சார்பில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஸ்ரீதரன் காணாமல் போய் 2 நாட்களாகியும்இதுவரை அவர் குறித்த எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீஸார் தீவீர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications