திமுக வேட்பாளர்: நேர்காணல் தொடங்கியது
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்துள்ள திமுகவினரிடம் இன்றுகாலை நேர்காணல் தொடங்கியது.
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதவுள்ளன. அதிமுகசார்பில் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 44 பேர் இரு தொகுதிகளிலும் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களிடம் இன்று காலை அண்ணாஅறிவாலயத்தில் நேர்காணல் தொடங்கியது.
திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, தலைமைக் கழக முதன்மைச்செயலாளர் துரைருகன் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட திமுக செயலாளர்கள் முன்னிலையில் விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடந்துவருகிறது. வேட்பாளர்களின் பெயர்கள் நாளை அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications