மதுரை: கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலைவெகு விமரிசையாக நடந்தது. பச்சைப் பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கியதை லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திபரவசத்துடன் கண்டுகளித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின்முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 22ம் தேதி கோலாகலமாக நடந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5.15 மணியளவில் அலங்கரிக்கப்பட்டதேரில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன.

காலை 6.15 மணியளவில் சுந்தரேஸ்வரர்-பிரியாவிடை எழுந்தருளியுள்ள தேர் நிலையை விட்டு கிளம்பியது. இந்துஅறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் கலெக்டர் ராஜேந்திரன், மீனாட்சி அம்மன் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி பாஸ்கரன்,தென்மண்டல ஐ.ஜி.திரிபாதி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாசி வீதியில் கிளம்பிய தேர் 10 நிமிடத்திற்குள் தெற்கு மாசி வீதியை வந்தடைந்தது.

சுவாமி தேர் கிளம்பிய 30 நிமிடங்கள் கழித்து மீனாட்சி அம்மன் தேர் கிளம்பியது. இந்த தேர் 4 மாசி வீதிகளையும் வலம் வந்து10.30 மணியளவில் நிலையத்தை அடைந்தது.

தேர் திருவிழாவை காண தமிழகம் முழவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்திருந்தனர்.தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினரும் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

அழகர் ஆற்றில் இறங்கினார்:

சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதையொட்டி கடந்த 22ம்தேதி, சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர் மலையிலிருந்து புறப்பட்டார். நேற்று எதிர்சேவை நடந்தது.

இன்று காலை அழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் ஆற்றில் இறங்கினார். இந்த நிகழ்ச்சியை அங்குகூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதையொட்டி மதுகை நகரமே இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

பச்சைப் பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கியதால், இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக இருக்கும் என்று மக்கள் நம்பிக்கைதெரிவித்தனர்.

நாளை இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+