சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை: பாராளுமன்ற கமிட்டி வலியுறுத்தல்
டெல்லி:
சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என்று பாராளுமன்ற கமிட்டி வலியுறுத்தி உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் கிளையை இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சென்னை உட்பட 4 முக்கிய நகரங்களில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்கலாம்என்று மத்திய அரசு கருதியது.
இந் நிலையில் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் சட்டம் மற்றும் நீதித்துறை பாராளுமன்ற கமிட்டியின் 6வது மானியகோரிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், காரணம் எதுவுமின்றி உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க தொடர்ந்துஎதிர்ப்பு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது.
உச்சநீதிமன்றத்திற்கு கிளைகள் அமைத்தால் நீண்ட தூரத்தில் இருக்கும் மக்கள் டெல்லிக்கு வரவேண்டிய அவசியம் இருக்காது.எனவே இந்த கோரிக்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். சோதனை முறையில் முதலில் சென்னையில்கிளையை அமைக்கலாம். அது வெற்றி பெற்றால் மற்ற இடங்களிலும் கிளைகளை அமைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications