கலாம் திட்டத்தை கிடப்பில் போட்ட மத்திய அரசு!
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அறிவித்த தேசிய அறிவியல் கழக திட்டம், மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால்,கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அடிப்படையில் விஞ்ஞானியான அப்துல் கலாம், இந்தியாவில் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க இந்தியாவின் பல்வேறுபகுதிகளில் தேசிய அறிவியல் கழகம் (என்.ஐ.எஸ்) உருவாக்கப்பட வேண்டும் என்று வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுயோசனை தெரிவித்தார்.
புவனேஸ்வரில் உத்கல் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடனும், புனேவில் புனே பல்கலைக்கழக ஒத்துழைப்புடனும் தேசியஅறிவியல் கழகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு மே மாதம் விரிவான ஆய்வில் பல்கலைக்கழக மானியக் குழு ஈடுபட்டது. தேசியஅறிவியல் கழகம் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ. 74.5 கோடி ஒதுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்குப்பிறகு இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இடம் தேர்வு செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளும் அப்படியே முடங்கி விட்டன. மத்திய அரசிடமிருந்து இதுகுறித்துஎந்த உத்தரவும் வராத காரணத்தால் திட்டம் முடங்கிப் போய் விட்டதாக கூறப்படுகிறது.
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் வரிசையில், தேசிய அறிவியல் கழகத்தை உருவாக்க அப்துல் கலாம்ஆர்வம் கொண்டிருந்தார். இந்த அறிவியல் கழகத்தில் ஐந்து ஆண்டு எம்.எஸ்.சி அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல்பாடம் கற்றுத் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஐ.ஐ.டி. போன்றவற்றில் சேர முடியாத, அதேசமயம் திறமையான இளம் விஞ்ஞானிகளுக்கு தேசிய அறிவியல் கழகம் நல்லமாற்றாக அமையும் எனவும் கலாம் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார். இருப்பினும் மத்தியஅரசின் தாமதம் மற்றும்செயல்படாத தன்மை காரணமாக இந்த அருமையான திட்டம் செயலிழந்து கிடக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications