கீரிப்பட்டி: 15 தலித் குடும்பங்கள் தள்ளி வைப்பு
மதுரை:
சமீபத்தில் தேர்தல் நடந்த மதுரை மாவட்டம் கீரிப்பட்டி கிராமத்தில், "ஊர் கட்டுப்பாட்டை மீறி, விடுதலைச் சிறுத்தைகள்வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டதற்காக, 15 தலித் குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கீரிப்பட்டி தலித் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஊர் மக்கள் சார்பில் அழகுமலைஎன்பவரும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பூங்கொடி என்பவரும் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளருக்கு ஓட்டுப் போடக் கூடாது என்ற "ஊர் கட்டுப்பாட்டை மீறி பூங்கொடிக்குஓட்டுப் போட்ட "குற்றத்திற்காக 15 தாழ்த்தப்பட்ட குடும்பங்களை தள்ளி வைத்து கீரிப்பட்டி "ஊர்ப் பெரியவர்கள்உத்தரவிட்டுள்ளனர்.
கீரிப்பட்டியில் பிறமலைக் கள்ளர் வகுப்பினர்தான் அதிகம் உள்ளனர். இதன் காரணமாக, தலித் ஒருவர் தங்களது தலைவராகவருவதை அவர்கள் விரும்பவில்லை. இந்தப் பிரச்சினை காரணமாகவே இங்கு தலைவர் தேர்தல் சரிவர நடக்காமல் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஊர் மக்கள் சார்பில் அழகுமலையை நிறுத்திய பிறமலைக் கள்ளர் வகுப்பினர்,விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளருக்கு யாரும் ஓட்டுப் போடக் கூடாது என்று தலித் வகுப்பினரை எச்சரித்திருந்தனர்.
கடந்த முறை நடந்த தேர்தலிலும் பூங்கொடிதான் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு 3ஓட்டுக்களே கிடைத்தன. ஆனால் இந்த முறை, அவருக்கு 29 ஓட்டுக்கள் கிடைத்தது கள்ளர் வகுப்பினருக்கு பெரும்அதிர்ச்சியைக் கொடுத்தது.
இதையடுத்து தங்களது உத்தரவை மீறி பூங்கொடிக்கு ஓட்டுப் போட்டதாக 15 தலித் குடும்பங்களை அடையாளம் கண்டுஅவர்களுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளனர்.
ஊரில் உள்ள யாரும், எந்தக் கடைக்காரர்களும் அரிசி, பருப்பு, காய்கறிகள், பால் ஆகியவற்றைக் கொடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை குறித்து கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பன் என்ற தலித், உசிலம்பட்டி டி.எஸ்.பி.கோவிந்தராஜிடம் புகார் கொடுத்துள்ளார்.
அதில், தடையுத்தரவைப் பிறப்பித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்பன் கோரியுள்ளார். தாசில்தார்நாகலிங்கத்திடம் இதே போன்ற புகார் மனு தரப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டதற்காக 15 தலித் குடும்பங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை அழகுமலை தற்போது வெளியிட்டுள்ளார். அவர்கூறுகையில், தலித் சமுதாயத்தினர் இந்தக் கிராமத்தில் சிறுபான்மையினராக உள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவது நியாயமாக இருக்காது. எனது மனசாட்சிக்கு அது நியாயமாகப்படவில்லை. அதனால் தான் பதவயை ராஜினாமா செய்து விட்டேன் என்று கூறியுள்ளார் அழகுமலை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications