சேலம் டி.எஸ்.பி. மாயம்: உயர் அதிகாரி திட்டியதாக மனைவி புகார்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு பதவி உயர்வு பெற்ற டி.எஸ்.பி காணாமல் போயுள்ளார். உயர் அதிகாரிதிட்டியதால் அவர் காணாமல் போனதாக அவரது மனைவி புகார் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் டி.எஸ்.பி. மணிரத்தினம். இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் பழைய பாளையம்.மணிரத்தினத்தின் குடும்பத்தினர் நாமக்கல் சந்தைப்பேட்டையில் வசித்து வருகிறார்கள்.

அதிரடிப்படையில் சேர்ந்து வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மணிரத்தினத்திற்கு டி.எஸ்.பியாக பதவி உயர்வுகொடுக்கப்பட்டது. கடந்த மாதம்தான் அவர் டி.எஸ்.பி. ஆனார்.

கடந்த 23ம் தேதி ஓமலூலிருந்து ஜீப் மூலம் சேலம வந்தார். பஸ் நிலையத்தில் ஜீப்பை நிறுத்திய அவர், வந்து விடுகிறேன் என்றுடிரைவரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் திரும்பி வரவே இல்லை.

இதையடுத்து ஜீப் டிரைவர் ஓமலூர் திரும்பி விட்டார். அடுத்த நாளும் மணிரத்தினம் ஓமலூர் வரவில்லை. இதனால்பதட்டமடைந்த அவரது மனைவி தனலட்சுமி தனது உறவினர்களுடன் சேலம் வந்தார். அங்குள்ள உயர் அதிகாரிகளைச் சந்தித்துகணவர் காணாமல் போனது குறித்து புகார் கூறினார்.

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், மணிரத்தினத்திடம் கடுமையாக நடந்து கொண்டதன் காரணமாகவே அவர் காணாமல் போய்விட்டதாக தனலட்சுமி கூறுகிறார். இந் நிலையில் பள்ளபட்டி காவல் நிலையத்தில் தனலட்சுமி ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், 30.3.2005 அன்று எனது கணவர் மனிரத்தினம் ஓமலூர் துணை காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டார்.பணி காரணமாக அவர் ஓமலூரில் தங்கியிருந்தார்.

என்னையோ, குழந்தைகளையோ சந்திக்க அவர் ஊருக்கு வரவில்லை. பணிச்சுமை காரணமாக அவர் வரவில்லை என்று நான்நினைத்துக் கொண்டேன். இந்த நிலையில் அவர் காணாமல் போயுள்ளார்.

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் எனது கணவரிடம் கடுமையாக நடந்து கொண்டதால்தான் அவர் காணாமல் போய் விட்டார்என்று சந்தேகப்படுகிறேன் என்று கூறியுள்ளார் தனலட்சுமி.

காணாமல் போய் விட்ட டிஎஸ்பியை கண்டுபிடிக்கும் முயற்சியில் சேலம் மாநகர காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+