சங்கரராமன் வழக்கு: ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் ஜூன் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இதுவரை விசாரிக்கப்பட்டு வந்த சங்கரராமன் கொலை வழக்கு, குற்றப்பத்திரிக்கை தாக்கலுக்குப் பின்னர் தற்போது செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் செங்கல்பட்டு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன.
27ம் தேதி (இன்று) செங்கை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் நீதிபதி அறிவித்தார். இதையடுத்து இன்றுசெங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இருவரும் நீதிமன்றத்தில் நீதிபதி அக்பர் அலி முன்புஆஜராயினர்.
அவர்களுக்கு ஸ்டூல்கள் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, அதில் அமருமாறு கூறினார். இதையடுத்து இருவரும் அமர்ந்தனர்.
அதே போல இந்த வழக்கில் கைதாகி பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் நீதிபதி முன்ஆஜர்படுத்தப்பட்டனர். சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரகு மட்டும் தாமதமாக அழைத்து வரப்பட்டார்.
ஆனால் சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 12 குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.
இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அக்பர் அலி உத்தரவிட்டார்.அன்றைய தினம் அனைத்து குற்றவாளிகளின் வழக்கறிஞர்களும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
அப்போது பேசிய அரசு வழக்கறிஞர்கள், விசாரணையை ஜூன் 16க்கு முன்பே நடத்த வேண்டும் என்றார். ஆனால், அந்தக்கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
இந்த வழக்கின் ஆவணங்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் சரி பார்க்கப்பட்ட பின்னர் வழக்கு, முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படுமா அல்லது கூடுதல் செஷன்ஸ் அல்லது விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்பதைநீதிபதி அறிவிப்பார்.
ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கு:
இதற்கிடையே ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் விசாரணையை வரும் மே 11ம் தேதிக்கு ஒத்தி வைத்துசைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி இன்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ஜெயேந்திரர் உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications