கர்நாடக சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 27,600 கோடியாக உயர்வு
பெங்களூர்:
2004-05ம் ஆண்டில் கர்நாடகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 27,600 கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 52சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டில் (2005-06ம்) சாப்ட்வேர் ஏற்றுமதியை ரூ. 35,000 கோடியாக அதிகரிக்க அம் மாநிலம் இலக்கு நிர்ணயித்துள்ளது.இதன்மூலம் 50,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
கடந்த ஆண்டில் மட்டும் 129 வெளிநாட்டு நிறுவனங்கள் பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனங்களில் ரூ. 2,783 கோடியை முதலீடுசெய்யவும், நிறுவனத்தைத் தொடங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சராசரியாக 3 நாட்களுக்கு ஒரு நிறுவனம் என்ற விகிதத்தில் பெங்களூரில் சாப்ட்வேர் தொழிலைத் தொடங்கியுள்ளன.
கர்நாடகத்தின் ஒட்டுமொத்த சாப்ட்வேர் ஏற்றுமதியில் 63 சதவீதம் அமெரிக்காவுக்கும், 23 சதவீதம் ஐரோப்பிய நாடுகளையும்சென்றடைந்துள்ளன.
மொத்த சாப்ட்வேர் உற்பத்தியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு 50 சதவீதமாக இருந்துள்ளது.
மைசூர், மங்களூரில் இருந்தும் ரூ. 876 கோடிக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி நடந்துள்ளது.
கர்நாடகத்தின் ஹார்டுவேர் ஏற்றுமதி கடந்த ஆண்டில் ரூ. 1,768 கோடியைத் தாண்டியுள்ளது. ஹார்டுவேர் தயாரிப்பில் ஈடுபடகடந்த ஆண்டில் 8 புதிய நிறுவனங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூரில் ஹார்டுவேர் தயாரிப்பில்ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications