சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி: அத்வானி
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் அதற்கு தொண்டர்கள் தயாராக வேண்டும்என்றும் அக் கட்சியின் தலைவரான அத்வானி கூறியுள்ளார்.
குரோம்பேட்டை பாலாஜி மஹாலில் நடக்கும் இந்த பாஜக எம்.எல்.ஏக்கள், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நிலை, தற்போதைய அரசியல் சூழ்நிலை, சட்டசபைத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டியஅணுகுமுறை, கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இம் மாநாட்டுக்கு அத்வானி தலைமை வகித்தார். அவர் பேசுகையில்,
வரும் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கூட்டத்தில் பேசிய பலரும் கருத்து தெரிவித்தனர்.அவர்களது கருத்தை நான் மதிக்கிறேன், ஏற்றுக் கொள்கிறேன்.
இப்போது ஏப்ரல் 2005. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடைபெறும். அந்தத் தேர்தலைபாஜக தனது சொந்த பலத்திலேயே சந்திக்கும்.
பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் வகையில் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தனித்துப்போட்டியிட தயாராக வேண்டும். இது தொடர்பான உத்திகள் இந்தக் கூட்டத்தில் வகுக்கப்படும்.
நாடாளுமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து திங்கள்கிழமை டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் ணிடிவெடுக்கப்படும் என்றார் அத்வானி என்றார்.
இம் மாநாட்டில் பிரமோத் மகாஜன், பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக சென்னை வந்த அத்வானிக்கு விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.












Click it and Unblock the Notifications