மூத்த தமிழ் பத்திரிக்கையாளர் சுட்டு கொலை: இலங்கை ராணுவம் மீது புலிகள் புகார்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையின் மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளரான சிவராம் தர்மரத்தினம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரை ராணுவ உளவுப்பிரிவினரும் அதனுடன் இணைந்து செயல்பட்டு வரும் சில கும்பல்களுமே கொலை செய்துள்ளதாக விடுதலைப் புலிகளும் குற்றம்சாட்டியுள்ளனர்.

46 வயதான தர்மரத்தினம் தமிழ்நெட்.காம் இணையத் தளத்தின் ஆசிரியர் குழுவின் மூத்த உறுப்பினராவார். நேற்று முன் தினம்இரவு அவர் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கொழும்பில் பம்பலபிதியா பகுதியில் ஒரு உணவகத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் அவர்கடத்தப்பட்டார். 4 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றது.

நேற்று காலை இலங்கை நாடாளுமன்றக் கட்டடத்தின் பின்புறம், அதி பாதுகாப்பு மிக்க பகுதியில், 500 மீட்டர் தொலைவில்அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. தலையில் பலத்த காயங்களுடன் அவர் பிணமாகக் கிடந்தார்.

தாரகி என அன்புடன் அழைக்கப்பட்டு வந்த சிவராமின் கொலைக்கு பல தரப்பில் இருந்து கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த் கொலைக்கு ராணுவ உளவுப் பிரிவினரும், அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் பாரா மிலிட்டரிப் படைகளுமேகாரணம் என விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராணுவ அதி பாதுகாப்பு மிக்க பகுதியில் தான் இந்தக் கொலை நடந்துள்ளது. இதற்கு இலங்கை அரசே பொறுப்பேற்ற வேண்டும்.இந்தக் கொலை தமிழ் மக்களிடையிலும் பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய உணர்வை வளர்ப்பதில் சிவராம் பெரும் பங்கு வகித்தார். அவருக்கு ராணுவ உளவுப் பிரிவிடம் இருந்து கொலைமிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தபோதும் கூட சிங்கள இன வெறியைஅச்சமின்றி தனது எழுத்துக்களில் எதிர்த்து வந்தார் என்று புலிகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ப்ளாட் இயக்க போராளியான சிவராம், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா விலகிச்சென்றபோது அதை வன்மையாக கண்டித்தார். மேலும் கருணாவுடனான தனது தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த சிவராம், கருணா கும்பலுக்கு எதிராக கட்டுரைகள் வெளியிட்டு வந்தார். புலிகளின் தலைவர்பிரபாகரனை தீவிரமாக ஆதரித்து வந்தார்.

இந் நிலையில் இந்தக் கொலையில் தங்களுக்குத் தொடர்பில்லை என இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. இந்தச் சம்பவம்தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

சிவராமின் கொலைக்கு உலகம் முழுவதிலும் பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் தெரெஸிடா ஷாபர் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில்,

இலங்கையின் மிகச் சிறந்த அரசியல் ஆய்வாளர் சிவராம். சிவராமைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் தமிழ் மக்களுக்கு மிகஅவசியமானவர்கள். அவரைக் கொன்றதன் மூலம் தமிழர்களுக்கும் இலங்கைக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டனர் என்றுகூறியுள்ளார்.

அதே போல ஜப்பானிய தூதரகமும், பல பத்திரிக்கையாளர்கள் சங்கங்களும் சிவராமின் கொலையைக் கண்டித்துள்ளன.

சிவராமின் உடல் அவரது விருப்பபப்படி வரும் திங்கள்கிழமை மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

கொல்லப்பட்ட சிவராமின் குடும்பத்தினருக்கு உதவ தமிழ்நெட் நிறுவனம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+