பாலமுரளி கிருஷ்ணாவுக்கு செவாலியே விருது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு செவாலியே விருது வழங்கப்படுகிறது.

ஏராளமான புதிய ராகங்களை கண்டுபிடித்துள்ள பாலமுரளி கிருஷ்ணா 400 சாகித்யங்களையும் இயற்றியுள்ளார். 5பல்கலைக்கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டங்களை பெற்றுள்ள இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி,மராத்தி, ஒரியா உட்பட பல மொழிகளில் பாடியுள்ளார்.

பாலமுரளி கிருஷ்ணா சிறுவயதில் இருந்தே இசை நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினார். இவர் வயலின், கஞ்சிரா, வயோலாஉட்பட பல இசைக்கருவிகளை இசைக்கும் திறமை வாய்ந்தவர்.

ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள பாலமுரளி கிருஷ்ணாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதானசெவாலியே விருது வழங்கப்படுகிறது.

அந்நாட்டின் கலாச்சார மற்றும் தகவல் துறை அமைச்சர் ரொனாட் டோனிடையு டெபாடரே, இதற்கான கடிதத்தை பாலமுரளிகிருஷ்ணாவுக்கு அனுப்பியுள்ளார்.

விருது வழங்கும் நிகழ்ச்சி விரைவில் பாரிஸ் அல்லது டெல்லியில் நடைபெறும். இதற்கு முன் இந்த விருது மறைந்த நடிகர் சிவாஜிகணேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+