டெல்லி தமிழ் சங்கத்தில் தீ விபத்து: பரவை முனியம்மா உயிர் தப்பினார்
டெல்லி:
டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில்பரவை முனியம்மா, குமரி முத்து உட்பட 2 ஆயிரம் பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நேற்று மாலை 4 மணியளவில் கலை நிகழ்சிகள் தொடங்கின. இதைப் பார்ப்பதற்கு அரங்கத்தில் சுமார் 2,000 பேர் கூடியிருந்தனர்.முதலில் ஒரு நிகழ்ச்சி முடிந்ததும், இரண்டாவதாக நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கிருந்த மின்சாரபோர்டில் தீப்பிடித்தது.
இதைக் கண்டதும் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தத பார்வையாளர்கள் அனைவரும் அலறியபடியே அங்கிருந்து ஓடினார்கள்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த பரவை முனியம்மா மற்றும் குமரி முத்து உட்பட அனைத்து கலைஞர்களும் உடனடியாகஅங்கிருந்து வெளியேறினர்.
தீ விபத்து குறித்து அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவவிடாமல் அணைத்தனர்.
மின் கோளாறே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் கலை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications