காஞ்சிபுரத்தில் 50 பேருக்கு மேல் கூட்டமாக செல்ல தடை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சட்டசபைத் தொகுதியில், 50 பேருக்கு மேல் கூட்டம் கூட்டமாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் சமுத்திரப்பாண்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காஞ்சிபுரம் தொகுதி இடைத் தேர்தலுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள்கொடுக்கப்பட்டுள்ளன. 2500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
7 இடங்களில் செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகனப் பசோதனையும் நடத்தப்படும். தேர்தல் விதிமுறைகளை மீறியதாகஇதுவரை பல்வேறு அரசியல் கட்சிகள் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசாரத்தின்போது பெரும் கூட்டமாக செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 பேருக்கு மேல் சேர்ந்து போகக் கூடாது. இதைக்கண்காணிக்க தொகுதிக்குட்பட்ட 5 காவல் நிலையங்களிலும் 5 வீடியோகிராபர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications