கும்மிடிப்பூண்டி: கரையேறுமா அதிமுக?
கும்மிடிப்பூண்டி:
இடைத் தேர்தல் நடக்கவுள்ள கும்மிடிப்பூண்டியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தீவிரமான தேர்தல் பணியில்இறங்கியிருக்கிறது அதிமுக.
அவருக்குத் துணையாக அமைச்சர்கள் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், பாண்டுரங்கன், வளர்மதி, சி.வி.சண்முகம், துணைசபாநாயகர் வரகூர் அருணாச்சலம், கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் களமிறங்கி பண மழையால்தொகுதியை குளிப்பாட்டி வருகின்றனர்.
சென்னையை ஒட்டிய திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளரான விஜய்குமார்,கொல்லப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனத்தின் மகன். கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட சுதர்சனத்தின் மகன்என்பது தவிர இவருக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்.
சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இத் தொகுதியில் 35 சதவீதத்தினர் வன்னியர்கள், மேலும் 30 சதவீத தலித் வாக்குகளும்உள்ளன.
வன்னியர்களின் ஓட்டு பாமக மூலமாக திமுகவுக்குப் போக வாய்ப்பிருப்பதால் தலித் ஓட்டுக்களையே முக்கியமாக குறிவைக்கிறது அதிமுக. இதற்காக தலித்கள் வாழும் காலனி பக்கமாக அமைச்சர்களின் கால்கள் அதிகமாக நடமாடி வருகின்றன.
அவர்கள் வைக்கும் கோரிக்கைகளில் குழாய் போடுவது போன்ற ஜிம்கானா வேலைகைளை மட்டும் உடனே செய்து தரும்அமைச்சர்கள், தொகுப்பு வீடு வேண்டும், நிலப் பட்டா வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகஉறுதிமொழி ஏதும் தராமல் ஜகா வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் பெரும்பாலான தலித் பகுதிகளில் அதிமுகவினருக்கு கடும் எதிர்ப்பே கிடைத்து வருகிறது.
இந்தத் தொகுதியில் தேர்தல் பணிக்கு பண பட்டுவாடா வேலையை கவனிப்பது அமைச்சர் தளவாய் சுந்தரம். குரு லாட்ஜில்தங்கியிருந்து கொண்டு அதிமுக கிளை, வட்டச் செயலாளர்களைக் கூப்பிட்டு நன்றாக கவனித்து அனுப்புகிறார். இந்தக் காசைஅப்படியே ஓட்டாக மாற்ற வேண்டுமாம்.
அதே போல பிற அமைச்சர்களும் பன்னீர்செல்வம் தலைமையில் தொகுதியை சுற்றிச் சுற்றி வந்து பல்ஸ் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications