காஞ்சிபுரம்: கரன்சியால் கலக்கும் அதிமுக

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் இடைத் தேர்தலில் மைதிலி திருநாவுக்கரசுவுக்காக கரன்சி மற்றும் அரசு இயந்திரத்தை முழு அளவில் அதிமுககளமிறக்கிவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் திறக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தில் எப்போதும் குறைந்தபட்சம் இரு அமைச்சர்களையாவதுபார்க்க முடிகிறது.

கணபதி ஹோம், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவற்றுடன் மங்களகரமாக திறக்கப்பட்ட இந்ததேர்தல் அலுவலகத்தில் அதிமுகவினரின் கார்கள் வருவதும் போவதுமாக உள்ளன.

பண பட்டுவாடா செய்யும் பணியை கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.அமைச்சர்கள் மூலமாக வரும் இந்த கரன்சி, சீனி மூலமாக காஞ்சியின் பட்டிதொட்டியெல்லாம் பாய்ந்து கொண்டிருக்கிறது.

அதே போல காஞ்சிபுரம் டி.எம். ஹோட்டலில் நிரந்தரமாக ரூம் போட்டுவிட்ட நிதியமைச்சர் பொன்னையன் கட்சியினரை தினமும்சந்தித்து, பிரச்சாரத்தையும் தேர்தல் பணிகளையும் ஒருங்கிணைக்கிறார்.

அவருக்குத் துணையாக அமைச்சர்கள் மீ.வைத்தியலிங்கம், சோமசுந்தரம், அன்னாவி, இன்பத்தமிழன், கருப்பசாமி, வேலுச்சாமி,மில்லர், அனிதா ராதாகிருஷ்ணன், கே.பி.அன்பழகன், ராமச்சந்திரன் ஆகியோர் நேரடியாக தேர்தல் வேலைகளில்ஈடுபட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர குடிசை மாற்றுவாரியத் தலைவர் பாலகங்கா உள்பட 4 வாரியத் தலைவர்களும், சுமார் 50 அதிமுகஎம்.எல்.ஏக்களும் இங்கு குவிந்துள்ளனர்.

தொகுதியில் சாலைகள் என்ற பெயரில் இருந்த குண்டு, குழிகளுக்கு எல்லாம் பெளடர் பூசுவது மாதிரி தார் போட்டு வருகிறார்கள்.(தேர்தல் வரையாவது இந்த தார் நிற்குமா என்பது சந்தேகமே). கேட்டவுடன் குடிநீர் இணைப்பு கொடுக்கிறார்கள்.

தேர்தல் கமிஷனின் கண்டிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இத் தொகுதியில் தேர்தல் பணிகளில் அரசு இயந்திரத்தின் நிழலைநன்றாகவே உணர முடிகிறது.

வாக்குப் பதிவு நடக்கும் பூத்களில் தங்களது ஏஜென்டுகள் அதிகமாக இருக்க வேண்டும் என்ற கணக்கில் டம்மியாக 4 பேரைசுயேச்சைகளாக களமிறக்கிவிட்டுள்ளது அதிமுக. இந்த சுயேச்சைகளின் சார்பில் அதிமுகவினர் பூத்களில் வலம் வரவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+