உள்குத்து வேலையில் ஜெயேந்திரர் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Jeyandrarகாஞ்சிபுரத்தில் அதிமுக தோற்கடிக்க சங்கர மடமும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இத் தொகுதியில் சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதா கட்சி சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் அக் கட்சியின் மாநிலத்தலைவருமான சந்திரலேகா போட்டியிட விரும்பினார். ஆனால், பிராமணரான இவரது ஓட்டு அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்களைப்பிரித்துவிடும் என்பதால், அவரை போட்டியிட வேண்டாம் என ஜெயேந்திரர் தடுத்துவிட்டாராம்.

அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் அனைத்தும் அப்படியே திமுகவுக்குப் போக வேண்டும் என்பது ஜெயேந்திரரரின் கணக்கு.இந்தத் தொகுதியில் சுமார் 18,000 பிராமண வாக்குகள் உள்ளனர்.

இவர்களில் பாதிப்பேர் கூட வழக்கமாக தேர்தல்களில் வாக்களிக்க வந்ததே இல்லை. இம் முறை ஒரு வாக்கு விடாமல் பதிவாகவேண்டும் என்று ஜெயேந்திரர் உத்தரவிட்டிருக்கிறார்.

இதனால் பிராமண சமூகத்தினரை அவர்களது இல்லங்களில் சென்று சந்திக்கும் அச் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்,திமுகவுக்கு வாக்களிக்குமாறு அட்வைஸ் தந்து வருகின்றனர்.

மேலும் இந்தத் தொகுதியில் உள்ள முதலியார் சமூகத்தினரை குறி வைத்து தனது புதிய நீதிக் கட்சியின் சார்பில் ஜெயேந்திரரின்வழக்கறிஞர் சண்முகத்தை நிறுத்த ஆசைப்பட்டார் அதன் தலைவர் ஏ.சி.சண்முகம்.

ஆனால், தனது வழக்கறிஞர் களத்தில் நின்றால், தனது ஆதரவாளர்கள் வாக்கு திமுகவுக்குப் போகாதே என்று கருதிய ஜெயேந்திரர்சண்முகத்தை நிற்க விடாமல் தடுத்துவிட்டார்.

இதையடுத்து வெங்கடேச முதலியார் என்பவரை நிறுத்தினார் ஏ.சி.சண்முகம். ஆனால், அதிமுக தரப்பில் இருந்து சண்முகத்துக்குவந்த அன்பான போன் கால்களைத் தொடர்ந்து முதலியாரை போட்டியில் இருந்து விலக வைத்துவிட்டார் ஏ.சி.எஸ்.

சந்திரலேகாவும், ஜெயேந்திரரின் வழக்கறிஞரும் போட்டியில் இல்லை என்பதால் அதிமுகவுக்கு எதிரான பிராமண சமூகத்தினரின்வாக்குகள் தங்களுக்கே லம்ப் ஆகக் கிடைக்கும் என பலமாக நம்புகிறது திமுக.

இதுக்குப் பெயர் தான் நோகாம நொங்கு திங்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+