மத்திய அமைச்சர் ரகுபதி மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
தேர்தல் விதிமுறைகளை மீறி சிவப்பு சுழல் விளக்குப் பொறுத்திய அரசு காரில் காஞ்சிபுரம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரகுபதி மீது விதிமுறை மீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் குமாரின் ஜீப்பை உள்துறை இணையமைச்சரான ரகுபதி தனது அரசு காரில் தொடர்ந்து சென்று பிரச்சாரத்தில்ஈடுபட்டார்.
காஞ்சியில் இதுவரை திமுகவினர் மீது 26 வழக்குகளும், அதிமுகவினர் மீது 22 வழக்குகளும், விடுதலை சிறுத்தைகள், புதிய நீதிக்கட்சி ஆகியவை மீது தலா ஒரு தேர்தல் விதிமீறல் வழக்கும் பதிவாகியுள்ளன.
விதிமுறைகளை மீறுவதில் திமுக, அதிமுக இடையே பெரும் போட்டா போட்டியே நடக்கிறது.












Click it and Unblock the Notifications