விதி மீறல்: சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுவதாக எழுந்த புகார்களைதொடர்ந்து தேர்தல் கமிஷனின் சிறப்புப் பார்வையாளர் நாளை இங்கு வருகிறார்.

காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் பொது இடங்களில் சுவர்களில் தேர்தல் விளம்பரங்கள் எழுதுவது,பேனர்களை வைப்பது, தனியாருக்கு சொந்தமான இடங்களில் அவர்களது அனுமதியின்றி விளம்பரம் செய்வது,

வாக்குச் சாவடிகளுக்கு 100 மீட்டர் தூரத்திற்குள் இதே போன்ற பிரசாரங்களை செய்வது உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறைமீறல் புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்தன.

இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர்க் குழாய்கள்,மோட்டார் பம்புகள் ஆகியவற்றை விநியோகிக்க ஏப்ரல் 14ம் தேதிவெளியான செய்தித் தாள்களில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

12ம் தேதியிட்ட இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகே வெளியாகி உள்ளது.

கும்மிடிப்பூண்டியில் சுவரில் வரையப்பட்டிருந்த கட்சி சின்னத்தை அழித்த வட்டாட்சியர், கிராம அதிகாரி, தலையாரிஆகியோரை மிரட்டியதாக அதிமுகவினர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து திருவள்ளூரில் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இது போல பல தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்த புகார்கள் வந்ததை தொடர்ந்து தனது சிறப்பு தேர்தல் பார்வையாளரைஅனுப்ப தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன் படி கே.ஜே. ராவ் என்ற இந்த சிறப்பு தேர்தல் பார்வையாளர் நாளைகாஞ்சிபுரம் வருகிறார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.

நாளை முதல் 2 நாட்களுக்கு அவர் தொகுதிகளை சுற்றிப் பார்த்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளர்கள் ஆகியோரைசந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறியுள்ளார் நரேஷ் குப்தா.

இவ்விரு தொகுதிகளுக்கும் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் இச்சம்பவங்களை ஆணையத்தின் கவனத்திற்குகொண்டு சென்றுள்ளனர். விதி மீறல்களிலும், அரசு அலுவலர்களை மிரட்டியவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கும்படிமாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+