கோத்ரா கமிஷன்: வாஜ்பாய் நேரில் ஆஜராகக் கோரி மனு
அகமதாபாத்:
குஜராத் கலவரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர்கோத்ரா கமிஷன் முன் நேரில் ஆஜராக உத்தரவிடக்கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடக்குவதில் அப்போதைய வாஜ்பாய்தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அஜாக்கிரதையாக இருந்தது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் கூறினார்.
இந் நிலையில் கே.ஆர்.நாராயணன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரையும் நேரில் ஆஜராக உத்தரவிடக் கோரி கோத்ரா கமிஷன் நீதிபதிகளானஜி.டி.நானாவதி மற்றும் கே.ஜி.ஷா ஆகியோரிடம் வழக்கறிஞர் முகுல் சின்ஹா ஒரு மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து வழக்கறிஞர் முகுல் சின்ஹா கூறுகையில், குஜராத்தில் கலவரம் ஏற்பட்ட உடனேயே ராணுவத்தை அங்கு அனுப்பியிருந்தால்பல உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். இந்த கருத்தைத் தான் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனும் கூறியிருந்தார்.
எனவே தான் வாஜ்பாய் மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் கோத்ரா கமிஷன் முன் நேரில் ஆஜராக உத்தரவிடக் கோரி நான் மனுகொடுத்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications