காஞ்சியில் இன்று பிரசாரம் தொடங்குகிறார் ஜெ
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தொகுதியில் ஜெயலலிதா இன்று முதல் பிரசாரம் தொடங்குகிறார். அவர், 10 இடங்களில் அதிமுக வேட்பாளரைஆதரித்து பேசுகிறார்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இரு தொகுதிகளிலும் 6 நாட்கள் பிரசாரம் நடத்துகிறார். காஞ்சிபுரம்தொகுதியில் 3 நாட்களும், கும்மிடிப்பூண்டி தொகுதியில் 3 நாட்களும் அவர் பிரசாரம் செய்கிறார். இந்த இரு தொகுதிகளிலும் 58இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
இன்று முதல் காஞ்சிபுரம் தொகுதியில் ஜெயலலிதா பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 4 மணியளவில் சென்னையிலிருந்துபுறப்படும் அவர், 5 மணியளவில் வெள்ளை கேட் பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.
நாளை கன்னிகாபுரத்தில் 2வது நாள் பிரசாரத்தை தொடங்கும் ஜெயலலிதா தனம்பாக்கம், ஓக்கை, களக்காட்டூர், ஆற்பாக்கம்,மாகரல், காவாந்தண்டலம், கம்பராஜபுரம், தம்மனூர், கன்னடியன் குடிசை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
5ம் தேதி ஓய்வுக்குப் பிறகு 6ம் தேதி கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட தானா குளம் முதல் ஊத்துக்கோட்டை வரை 10இடங்களில் பேசுகிறார். 7ம் தேதி கும்மிடிப்பூண்டி தொகுதியில் வாணியன் சத்திரம் முதல் ஊத்துக்கோட்டை வரை பிரசாரம்செய்கிறார்.
பிறகு 9ம் தேதி காஞ்சிபுரம் தொகுதியிலும், 10ம் தேதி கும்மிடிப்பூண்டி தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்து தனது தேர்தல்சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.
வரவேற்பு ஏற்பாடுகள்:
இன்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க அதிமுகவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். காஞ்சிபுரம் நகரஎல்கையான டோல்கேட்டில் அவருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளிக்கின்றனர்.
ஜெயலலிதாவுக்கு எம்.பி. கோகுல இந்திரா தலைமையிலான பெண்கள் அணியினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்புதருகிறார்கள்.
முதல்வர் செல்லும் வழி நெடுகிலும் குழல் விளக்குகள் கட்டப்பட்டுள்ளன. பல பகுதிகளில் ஜெயலலிதாவை வரவேற்று டிஜிடல்பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
அதிமுக தலைமை கழக நிர்வாகிகளான கே.ஏ. செங்கோட்டையன், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், மாவட்டச் செயலாளர்வி. சோமசுந்தரம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முதல்வர் வருகைக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி காஞ்சிபுரம் தொகுதியில் ஐஜி ஜாங்கிட் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட பிறகு இப்போது தான் முதன் முறையாக ஜெயலலிதா காஞ்சிபுரம் செல்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications