திருச்செந்தூரில் கடல் கொந்தளிப்பு: திருப்பத்தூரில் ஐஸ் மழை- சூறாவளி தொடர்கிறது
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் நேற்று மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் கடலோரப் பகுதி மக்கள் பயந்து வெளியேறினர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்தஞாயிற்றுக்கிழமை வீசியடித்த சூறாவளியுடன் கூடிய மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதே போல பல பகுதிகளிலும்தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இங்குள்ள ஆலந்தலை கடற்கரை பகுதியில் திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. சுமார் 3 அடி உயரத்திற்கு கடல் அலைகள்எழும்பின. இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.
கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்துஅப்பகுதியை சேர்ந்த மீனவர் சங்க தலைவர் ஏசு ராஜா கூறுகையில், காலை சுமார் 11.30 மணியளவில் அமலி நகருக்கும்,ஆலந்தலைக்கும் இடையே கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அப்போது சுமார் 4 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின. இதைப்பார்த்த மக்கள் பீதியடைந்து உடனடியாக ஊரை விட்டுவெளியேறினார்கள். நாங்களும் எங்களது படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று விட்டோம் என்றார்.
மேலும் 1 நாள் சூறாவளி:
இதற்கிடையே சூறாவளிக்காற்றும், மழையும் மேலும் 1 நாள் நீடிக்கும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை இலாகா வெளியிட்ட செய்திக்குறிப்பில், வழக்கமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் கடலில்தாழ்வழுத்த நிலை காரணமாக மழை பெய்யும்.
கோடைக்காலங்களில் நிலத்தில் ஏற்படும் வெப்பம், உறுதியற்ற காலநிலை, ஈரப்பதத்தால் மழை மேகங்கள் உருவாகி கோடைமழை பெய்யக்கூடும். இவ்வாறு கோடை மழை பெய்யும் போது அதிக வேகத்தில் காற்று சுழன்று அடிக்கும்.
இதைப் போலத்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றும் சென்னையில் சூறாவளிக் காற்று வீசியது. அன்று இரவு 99 கிமீ வேகத்தில்காற்று அடித்தது. இதைப் போல சூறாவளிக் காற்றும், மழையும் மேலும் 1 நாளுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் ஐஸ் கட்டி மழை:
சென்னையில் சுழற்றியடித்த சூறாவளியைப் போல திருப்பத்தூரில் நேற்று மாலை 3.30 மணியளவில் சூறாவளிக் காற்றுடன் மழைபெய்தது. அப்போது திடீரென்று ஐஸ் கட்டி மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் இந்த ஐஸ் கட்டி மழை பெய்தது.
![]() |
திருப்பத்தூரை அடுத்துள்ள தாமலேரிமுத்தூர், கட்டேரி, வைரவன்வட்டம், அம்மையப்பன் நகர் ஆகிய பகுதிகளில் பெரிய சைஸ்எடை கொண்ட ஐஸ் கட்டிகள் விழுந்தன.
இதனால் இந்த பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகளாக காட்சியளித்தது. சிறிது நேரத்தில் இவை உருகி வெள்ளமாகஓடியது.
இந்த அதிசய ஐஸ் கட்டி மழை இப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது. இவை சுண்ணாம்புக் கல் போல காட்சியளித்தன.
இவற்றை அப்பகுதி மக்கள் கையில் எடுத்து பார்த்து மகிழ்ந்தனர். காஷ்மீர் பகுதிகளில் தான் இதே போல ஐஸ் கட்டிகளைபார்த்துள்ளோம். அதுவும் படத்தில் தான் பார்த்துள்ளோம். இப்போது எங்கள் ஊரிலேயே ஐஸ் கட்டிகளை ரோடுகளில் பார்த்தபோது மிகவும் அதிசயமாக உள்ளது என்று இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.













Click it and Unblock the Notifications