ஆதிகேசவனுக்கு நடிகைகளுடன் தொடர்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

என்.ஆர்.ஐகளிடம் இருந்து கடன் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.50 கோடி வரை மோசடி வரை மோசடி செய்த பலேகில்லாடி ஆதிகேசவன் தன்னிடமிருந்த பணத்தை நடிகர், நடிகைகளுக்கு வாரி வழங்கியது தெரியவந்துள்ளது.

ஆதிகேசவன் மோசடி செய்த பணத்தை எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளார், எங்கு பதுக்கி வைத்துள்ளார் என்பது குறித்துபோலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடி செய்த பணத்திலிருந்து அவர், நடிகர், நடிகைகளுக்கு தாராளமாக அள்ளி, அள்ளி கொடுத்துள்ளார். சிலருக்கு கடனாகவும்கொடுத்துள்ளார். இதே போல அரசியல்வாதிகளுக்கும் இவர் பணம் சப்ளை செய்துள்ளாராம்.

எந்தெந்த நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்திற்கு ஆவணங்கள்ஏதும் உள்ளதா, கொடுத்த பணம் திரும்ப வருமா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதிகேசவனின் உதவியாளரான ஜெயவீரனும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். அவரையும் போலீஸார் தேடிவருகிறார்கள்.

ஜெயவீரனுக்கு பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுடன் நெருங்கிய பழக்கம் உள்ளது. எனவே இவர்களதுவீடுகளில் பதுங்கி இருக்கிறாரா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+