கும்மிடிப்பூண்டி: வருகிறது துணை ராணுவப் படை!
Subscribe to Oneindia Tamil
கும்மிடிப்பூண்டி:
தேர்தல் பாதுகாப்பிற்காக கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு துணை ராணுவம் இன்று வருகிறது.
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தை ஈடுபடுத்தமுடிவு செய்திருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிவித்திருந்தார்.
இவர்கள் தவிர திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து 1200 போலீஸார் கும்மிடிப்பூண்டி வந்துள்ளனர். மேலும்தமிழ்நாடு சிறப்புக் காவல் படையை சேர்ந்த 6 கம்பெனி போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி தொகுதியில் மட்டும் மொத்தம் 2500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications