ரவியை கொல்ல சதி: கதிரவன் அண்ணனுக்கு முன் ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அப்ரூவர் ரவி சுப்பிரமணியத்தைக் கொல்ல நடந்த சதித் திட்டம் தீட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், கதிரவனின்அண்ணன் அலங்காருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவி சுப்பிரமணியத்தைசெங்கல்பட்டு சிறைக்கு வரும் வழியில் தீர்த்துக் கட்ட சதித் திட்டம் தீட்டியதாக ரெளடி அகிலன், சுந்தரேச அய்யர், ரகு, கதிரவன்,அவரது சகோதரர் அலங்கார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீது கஞ்சா வழக்கும் போடப்பட்டுள்ளது. இதில், அலங்கார் 7வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கைதாகாமல் தப்ப சென்னை உயர்நீதிமன்றத்தில் அலங்கார் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்தவழக்கு விசாரைணயின்போது, அலங்கார் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று அரசுத் தரப்பு விளக்கம் கூறியது.

இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி தணிகாச்சலம் தீர்ப்பு வழங்கினார். அவர் கூறுகையில்,

அலங்கார் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் 20(1)வது பிரிவின் கீழ் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றுஅரசுத் தரப்பு கூறியுள்ளதால், அந்தப் பிரிவின் உள் அம்சங்கள் குறித்து ஆராய கோர்ட் விரும்பவில்லை.

வரும் நாட்களில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் 20(1)வது பிரிவின் கீழும், இந்தியக் குற்றவியல் சட்டம் 120-பி-இன்கீழும் மனுதாரர் மீது வழக்குத் தொடரப்பட்டால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

மனுதாரரைப் பொருத்தவரை அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாகத் தெயவில்லை. அகிலனுக்கு, அலங்கார்பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பணத்தை கொலைச் சதிக்கு அகிலன் பயன்படுத்தவில்லை. மாறாக,கஞ்சாதான் வாங்கியுள்ளார்.

எனவே மனுதாரர் மீது கொலைச் சதிக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது அடிப்படை இல்லாதது.

கொலைச் சதித் திட்டத்தில் அலங்காருக்கு தொடர்பு இல்லை என்பதால், அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறேன். இன்றுமுதல் 15 நாட்களுக்குள் சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும்.

அதன் பின்னர் ரூ. 25,000 தனி நபர் ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் அளித்து விடுதலை ஆகலாம்.

செங்கல்பட்டு காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி அலங்கார் கையெழுத்திட வேண்டும் என்றுஉத்தரவிட்டார் நீதிபதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+