தமிழ்நெட் பத்திரிக்கையாளர் கொலை: கண்டித்து போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர் சிவராம் கொல்லப்பட்டதை கண்டித்து கொழும்பில் பத்திரிகையாளர்கள் போராட்டம்நடத்தினர்.

இலங்கையில் தமிழ் நெட்காம் இணையதளத்தின் ஆசிரியர் குழுவின் மூத்த உறுப்பினரான சிவராம் தர்மரத்தினத்தை கடந்த மாதம்28ம் தேதி இரவு 10.30 மணியளவில் ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது.

மறுநாள் காலை இலங்கை பாராளுமன்றக் கட்டிடத்தின் பின்புறம் கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.தலையில் பலத்த காயங்களுடன் அவர் பிணமாகக் கிடந்தார்.

சிவராமின் கொலைக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தக் கொலைக்கு ராணுவ உளவுப் பிரிவினரும், அவர்களுடன்இணைந்து செயல்பட்டு வரும் துணை ராணுவப்படைகளுமே காரணம் என்று விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இலங்கை ராணுவம் கூறி வருகிறது. இது குறித்துவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்தது.

இந் நிலையில் சிவராம் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கொழும்பில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். ரயில்நிலையம் முன்பு நடந்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இலங்கை பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+