மயூரணி கொலை: பி.இ. தேர்வெழுத பாலபிரசன்னாவுக்கு அனுமதி
மதுரை:
இலங்கை மாணவி மயூரணி கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இலங்கை மாணவர்பாலபிரசன்னா, பி.இ. தேர்வு எழுத மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி அளித்துள்ளது.
மதுரை சோலைமலைத் தேவரின் அம்பிகா கல்லூயில் படித்து வந்த இலங்கை மாணவி மயூரணி கொலை செய்யப்பட்ட வழக்கில்பொறியியல் கல்லூரியில் படித்து வரும், இலங்கையைச் சேர்ந்த மாணவன் பால பிரசன்னாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனைவழங்கி மதுரை செஷன்ஸ் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இந் நிலையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பால பிரசன்னா தாக்கல் செய்த மனுவில், பொறியியல் தேர்வுகளை எழுதஅனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள் டி.முருகேசன், கண்ணதாசன் ஆகியோர், மே 5, 6, 17, 20 ஆகிய தேதிகளில் பொறியியல்படிப்புக்கான தேர்வை பால பிரசன்னா எழுத அனுமதிக்கப்படுகிறது.
அந்த நாட்களில் போலீஸார் பாதுகாப்புடன் பால பிரசன்னாவை தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று, தேர்வு முடிந்ததும்சிறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications